'நான் ஓர் சிறந்த சிங்கள பௌத்தன்' மேர்வின் சில்வா
அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரண்டு அரசியாவாதிகள் தொலைக்காட்சி விவாதமொன்றில் ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டனர். இவ்வாறு கடித்துக் கொள்வது மிருகங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். மனிதர்களுக்கு இது பொருத்தமாகாது.
அரசியல்வாதிகள் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனினும், இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கை இழிந்த நிலையில் காணப்பட்டது.
நான் ஓர் சிறந்த சிங்கள பௌத்தன். நான் எல்லா இனத்திற்கும் எல்லா மதத்திற்கும் கௌரவமளிக்கின்றேன்.
பௌத்த மத வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வடுவத்த விஹாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும், பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Post a Comment