ஹஜ் கோட்டா விவகாரம் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வுபெற பிரதம நீதியரசர் ஆலோசன
ஹஜ் யாத்திரையின் பொருட்டு வழங்கப்படும் கோட்டாவை பகீர்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
செரண்டிப் ஹஜ் யாத்திரீகர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
ஹஜ் யாத்திரை குழுவினரால் ஹச் யாத்திரீகர்களை தெரிவு செய்தமை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து செரண்டிப் ஹஜ் யாத்திரீகர் சங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
HAJ AWWARU SAIWATHU YARYAR POWATHU ALLAM INIMEL SINHALAWARKALTHAN SOLLUWARKAL ANTHA ALAWUKKU IWAN FAUSIYUM CADARUM AAKKIPPOTTANUKAL PANA PAITHIYAM PIDITHTHU ISLATHTHAI SINHALARKALIDAM WITRU POTTONUKAL KEWALAM KETTA NAAIKAL .
ReplyDelete