Header Ads



ரமழான் என்பது பிச்சைக்காரர்களின் மாதமா..? கெலிஓயாவில் நடைபெற்ற அசிங்கம்..!

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

புனித ரமழான் ஆரம்மாகியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தை பிச்சைக்கார சமூகம் என்று பிற மததத்தவர்கள் நினைக்கும் அளவிற்கு நம்மில் பலர் கையேந்தியவாறு நகரங்கள் கிராமங்கள் தோறும் சுற்றித்திரிவதைப் பரவலாகக் காணமுடிகின்றது. 

இவ்வாறு கையேந்தி வருபவர்களின் நிலை எப்படி என்பதைப் பற்றி அலசுவதை விடுத்து இத்தகைய புனித ரமளானின் கண்ணியத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும்; விதத்தில் சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளும் வசூல் நடவடிக்கைகள் அவ்வப்போது அம்பலமாகியும் வருகின்றன.

எனவே முஸ்லிம்கள் இத்தகைய  போலி ஆசாமிகளிடம் ஏமாந்து விடாமலிருப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாம் நோன்பு நாளன்று கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கெலிஓயா கலுகமுவ கிராமத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

இங்கு மத்ரஸா நிதி வசூல் என்ற பேரில் ஈடுபட்ட போலி வசூல் ஆசாமிகள் கையும் மெய்யுமாக ஊர்வாசிகளிடம் மாட்டிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இக்கிராமத்திற்கு வந்த இரு முஸ்லிம் நபர்கள் அரபுக்கல்லூரிக்கு ரமளானில் நிதி வசூலிப்பு N;மற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களில்  35 வயது மதிக்கத்தக்கவர் தாடி வைத்து ஜுப்பாவுடன்  தன்னை ஒரு முஸ்லிம் என்று அடையாளம் காட்டும் வகையில் ஆடை அணிந்திருக்க மற்றவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனாவார். இவர்கள் அநுராதபுரம் மற்றும் பிபிலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்கள் இருவரும் சில புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பணம் வசூலிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது இவர்களின் நடத்தைகள் மற்றும் பேச்சில் சந்தேகம் கொண்ட ஊர்வாசிகள் இருவரையும் பிடித்து துருவித்துருவி விசரித்த போது இவர்களின் போலி வேடம் அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.  

இவர்கள் போலி ஆவணங்களுடன் கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியில் அரபு மத்ரஸா ஒன்றுக்கு நிதி சேகரிப்பதாக வெளியேறி வந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு நிதி வூலிப்புக்காக ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபா சம்பளமாக பிரதான நபரினால் வழங்கப்படவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன் இருவரும் கடந்த ஒரு வாரகாலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இருவரும் நோன்பு நோற்றிருக்காத நிலையில் இச்செயலில் இறங்கியுள்ளனர். அத்துடன் கொழும்பு , கம்பளை , கண்டி  முதலான இடங்களிலும் இவ்விருவரும் வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் நிரூபணமாகியுள்;ளது.

மேலும் இவர்கள் வசம் நான்கு கையடக்க தொiபேசிகள் உட்பட போலி ஆவணங்களும் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  இவர்களின் ஆவணங்களில் காணப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய போது இலக்கங்கள் இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில இலக்கங்கள் இயங்கிய போது அதில் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும் கதைப்பது போல் முன்னுக்குப் பின் முரணாக கதைப்பது மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இறுதியில் இவர்கள் இருவரும் தாம் பொய் கூறி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

எப்படியாயினும் நோன்பு காலத்தில் இம்முஸ்லிம்கள் செய்த தவறை உணர்த்தி இருவரையும் மன்னித்துக் கொண்ட கலுகமுவ முஸ்லிம்கள் இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். ஆயினும் இத்தகைய ஆசாமிகள் விடயத்தில் சமூகம் அக்கறை செலுத்த வேண்டியதும் நமது சமூகம் ரமளானில் பாதை வழியே அலைந்து திரிவது பற்றி சமூகத் தலைமைகள் சிந்திக்க வேண்டியதும் கட்டாமாகும் என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.  

No comments

Powered by Blogger.