Header Ads



இஸ்ரேலியர்களை முகம்கொடுக்க புனித போராளிகள் தயார் - ஹமாஸ் பிரகடனம்


முற்றுகையில் இருக்கும் காசா மீது இஸ்ரேல் கடந்த இரு தினங்களுக்கு மேலாக நடத்திவரும் வான் தாக்கு தல்களில் பல சிறுவர்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையைச் சுற்றி படைகளை குவித்திருப்பதோடு தரைவழி ஆக்கிரமிப்பொன்றை நடத்தும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பமானது தொடக்கம் இதுவரையில் 550 பேர் காயமடைந் திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள் ளது. ஆனால் பலஸ்தீனர்கள் தொடர்ந்தும் தமது நிலத்தின் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. 

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 200க்கும் அதிகமான ரொக்கெட் தாக்கு தல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு சில ரொக்கெட்டுகள் காசாவில் இருந்து தூரத்தில் இருக்கும் தலைநகர் டெல் அவிவ் வரை பாய்ந்துள்ளது. 

காசா நாகர், பைத் ஹனூன் மற்றும் கான் யு+னிஸ் உட்பட காசா மீது இஸ்ரேல் குறைந்தது 550 இலக்கு களுக்கு வான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் நேற்று வியாழக்கிழமை வரை நடத்தப்பட்ட தாக்குதல் களில் 31 பேர் பலியாகியுள்ளனர். நேற்று நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் ஐந்து சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வான் தாக்குதல் ஆரம்பிக்கபட்டது தொடக்கம் ஒரே தாக்குதலில் அதிகம் பேர் கொல்லப்பட்ட சம்பவமாக இது அமைந்தது. 

இதில் கான் யுனிஸ் பகுதிக்கு அருகில் சன நெரிசல் அதிகம் கொண்ட பகுதியில் இருக்கும் வீடுகளே இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த தாக்குதல் இடம்பெற்றபோது அங்கிருந்த குடியிருப்பா ளர்கள் உறங்கிக்கொண்டிருந்ததாக உள்ளுர்வாசிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

தாக்குதலால் தரைமட்டமான மூன்று அல்லது நான்கு வீடுகளின் இடிபாடுகளுக்குள் இருந்தே உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். 

முன்னதாக கான் யு+னிஸ் கடற்கரை பகுதியில் இருக்கும் வக்த் அல் மர்ராஷ் என்ற தேனீர் கடை மீது நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். பல டஜன் பேர் உலகக் கிண்ண கால்பந்து அரையிறுதிப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தபோதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாக உள்ளுர்வாசி கள் குறிப்பிட்டுள்ளனர். 

அதேபோன்று மத்திய காசாவில் அல் சவைதா கிராமத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட மற்றொரு வான் தாக்குதலில் ஒரு தம்பதியும் அவர்களது இரு குழந்தை களும் கொல்லப்பட்டுள்ளனர். 

முன்னர் புதன்கிழமை பிந்திய இரவில் உள்ளுர் செய்திச் சேவையான மீடியா 24 தொலைக்காட்சியின் வாகன ஓட்டுனர் ஒருவர் இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் ஓட்டிச்சென்ற கார் வண்டியின் முன்பாகத்தில் 'டிவி" என்று சிகப்பு எழுத்தில் தெளிவாக எழுதப்பட்ட நிலையிலும் அந்த கார் மீது இஸ்ரேல் வானிலிருந்து குண்டு போட்டுள்ளது. 

புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் 108 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலத்தில் காசாவில் இருந்து 12 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாகவும் அதில் ஏழு ரொக்கெட்டுகள் அயன் டோம் பாதுகாப்பு முறை மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. 

இதில் ஆயுததாரிகள் மற்றும் ரொக்கெட் தாக்குதல் ஏவும் தளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை மற்றும் கட்டளை மையம் ஆகியவற்றை இலக்குவைத்தே காசா மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட் டுள்ளது. எனினும் அண்மைய தாக்குதல்களில் பெண்கள் சிறுவர்கள் என அப்பாவி பொது மக்களே கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை.

வியாழக்கிழமையும் காசாவிலிருந்து ரொக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு இதனால் இஸ்N ரல் எங்கும் சைரன் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஹமாஸின் ஆயுதப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், டெல் அவிவ் மீது இரு எம்.75 ரொக்கெட்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேலின் நெகெவ் மற்றும் நெடிவோட்டின் பொது மக்கள் வாழும் பகுதிகள் மீது மூன்று ரொக்கெட்டுகள் விழுந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே கான் யுனிஸ் பகுதியில் ஒரே குடும்பத்தின் எட்டுப் போர் கொல்லப்பட்ட சம்பவம், பரிதாபத்திற்குரியது என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் வெகு விரைவில் வீட்டுக்கு திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடே இலக்குவைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஏவுகணை விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு வெளியேறும்படி அறிவுத்தப்பட்டது. ஆனால் அது தாமதித்திருந்தது" என்று nஜரூ சலம் போஸ்ட் பத்திரிகைக்கு இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

மறுபுறத்தில் இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந் தோருக்கு சிகிச்சை வழங்க ரபா எல்லையை திறந்து விட அரசு தீர்மானித்திருப்பதாக எகிப்து அரச தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிராந்தியத்தில் மற்றுமொரு முழுமையான யுத்தம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். 'கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது" என்றும் அவர் எச்சரித்தார்.

ஹமாஸ் தமது ரொக்கெட் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்திய பான் கீ மூன், இஸ்ரேல் அரசு கட்டுப்பாட்டுடனும் சர்வதேச கடப்பாடுகளை மதித்து சிவிலியன்களை பாதுகாக்கும் படியும் அழுத்தம் கொடுத்தார்.

இந்த பதற்றம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட் டிருந்தது. 

எனினும் ஹமாஸ் மீது மேலும் தாக்குதலை தீவிரப் படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன் யாகு உறுதி அளித்துள்ளார். ஆயுததாரிகள் தமது ரொக்கெட் தாக்குதல்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்தார். 

பலஸ்தீன சட்டவாக்க கவுன்ஸில் உறுப்பினர் முஸ்தபா பக்குதி, நெதன்யாகு காசா மீது தரைவழி இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகவும் அது பாரிய உயிர்ப்பலியை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே ஹமாஸ் பரஸ்பர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தபோதும் அதனை இஸ்ரேல் நிராகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

மறுபுறத்தில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். 'இது ஒரு படுகொலை. முழுமையான குடும்பங்களையும் படு கொலை செய்து இஸ்ரேல் எமது மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஆயுததாரிகளுக்கு எதிராகவன்றி அனைத்து பலஸ்தீனர்களுக்கும் எதிராகவே இஸ்ரேல் யுத்தத்தில் ஈடுபடுகிறது. இஸ்ரேல் தனது குடியேற்ற திட்டத்தையே பாதுகாத்து வருகின்றது என்பது எமக்கு தெரியும்" என்று மேற்குக் கரை நகரான ரமல்லாஹ்வில் வைத்து அப்பாஸ் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தாம் எகிப்து ஜனாதிபதி அல் சிசி மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அப்பாஸ் குறிப் பிட்டார். 

மறுபுறத்தில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி'hல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பென்ஜ மின் நெதன்யாகுவின் தீவிர அரசுக்கு கண்டனத்தை வெளியிட்டார். இஸ்ரேல் மக்கள் தனது தலைமையை மாற்ற வேண்டும் அல்லது அவர்களது தலைமைகள் காசா மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

'நெதன்யாகு மூலம் பேரழிவுக்கு மேல் பேரழிவையே பெற்றுக்கொள்கிறீர்கள். அவர் உங்களுக்கு தோல்வியையும் அழிவையும் தவிர வேறு எதனையும் தரப் போவதில்லை," என்று குறிப்பிட்ட மி'hல், 'நீங்கள் எமது மக்களை கொல்கிறீர்கள். எம்மீது யுத்தம் திணிக்கப்படுவது உலகமே அறிந்தது. நாம் வலுக்கட்டாயமாக இந்த யுத்தத்திற்குள் நுழையவில்லை" என்றார்.

மி'hலின் உரைக்கு பதிலளித்த இஸ்ரேல் பொருளாதார அமைச்சரும் வலதுசாரி ஜ{விஷ் ஹோம் கட்சி தலைவருமான நப்தாலி பென்னட், 'மி'hல் வழக்கம் போல முட்டாள்தனமாக பேசுகிறார்" என்றார். 'நாம் எமது நடவடிக்கையை விரிவுபடுத்துவோம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்" என்று டெல் அவிவிலிருந்து அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். 

இதனிடையே ஹமாஸ் ரொக்கெட் தாக்குதலை நிறுத்தாத பட்சத்தில் வெகு விரைவில் காசா மீது தரை வழி தாக்குதல் ஆரம்பிக்கப்படலாம் என்று இஸ்ரேல் ஜனாதிபதி 'pமொன் பரிஸ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 'அவர்களிடம் நாம் எதிர்பார்த்திருக்கிறோம். அவர்களை நிறுத்தும்படி நாம் கோருகிறோம். நாம் ஒன்று, இரண்டு, மூன்று நாட்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேல் மீது தாக்குதலை பரப்பி வருகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். 

எனினும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அச்சுறுத்தல் முட்டாள்தனமானது என்றும் அது எவரையும் பயமுறுத்தாது என்றும் ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் இராணுவ பிரிவு போராளிகள் இஸ்ரேலின் கோழை வீரர்களை காசாவில் முகம்கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று குறிப் பிட்டார்.

இஸ்ரேலின் பீரங்கிகள் காசா எல்லையில் தொடர்ந் தும் ரோந்து செல்வதோடு 40,000 துணைப்படையினர் அவசர இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2008 இன் கடைசி பகுதி மற்றும் 2009 ஆரம்பத்தில் இஸ்ரேல் காசா மீது வான் தாக்குதல் பின் தரைவழி தாக்குதல் நடத்தியதில் 1300க்கும் அதிக மான பலஸ்தீனர்களும் 13 இஸ்ரேலியர்களும் கொல் லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.