'சர்வதேசத்தில் பௌத்தர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது'
இலங்கையில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புலமைசார் பௌத்த பிக்குகளின் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அளுத்கமை வன்முறைகள் தொடர்பில் பிக்குகள் குறைக்கூறாமல் வன்முறைக்கான அடிப்படை காரணிகளை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இலங்கையில் தீவிரவாதக்குழுக்கள் செயற்படுவதன் காரணமாக அதற்கு எதிராக பிக்குகள் குரல் கொடுத்தனர்.
தீவிரவாதக்குழுக்களுக்கு எதிராக அரசாங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் இன்று அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பிக்குகள் மீது பயங்கரவாத முத்திரையை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக சர்வதேசத்திலும் பௌத்தர்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக வண. மேதகொட அபெதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்னவே பௌத்தர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு காரணமானவர் என்றும் தேரர் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் தீவிரவாதத்தை நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment