ஐக்கிய அரபு ராஜ்ய விபத்தில் இலங்கை பெண் மரணம்
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் உம் அல் குவைன் பிரதேசத்தில் வீதியை கடக்க முயன்றபோது அவர் மீது காரொன்று மோதியதில் இலங்கையை சேர்ந்த 52 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் (வயது 42) படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வாகனத்தை செலுத்திச் சென்ற 58 வயதான சாரதி, வீதியில் குறித்த பெண்ணும் அவரது நண்பரும் இருப்பதை அவதானிக்கவில்லை என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு படையினரும் இணைந்து விபத்துக்கு உள்ளாகி காருக்கு கீழ் கிடந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment