Header Ads



மொஹமட் முர்சியின் மகனுக்கும் சிறைத் தண்டனை

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் மகன் அப்துல்லாஹ் முர்சி போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் அதனை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள் ளார். 

தனது வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த தாக 19 வயது அப்துல்லாஹ் மற் றும் அவரது நண்பரை வடக்கு கெய்ரோவில் வைத்து பொலிஸார் மார்ச் முதலாம் திகதி கைதுசெய் தனர். எனினும் சோதனைக்காக சிறுநீர் மதிரியை வழங்க இணங்கி யதை அடுத்து அடுத்த தினமே இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது பெறப்பட்ட சிறுநீர் மாதிரியில் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள் ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி முர்சியின் மகனுக்கு பென்ஹா நீதிமன்றம் ஓர் ஆண்டு சிறையும் 10,000 எகிப்து பௌண்ட் கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித துள்ளது. அவரது நண்பருக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டுள் ளது. எனினும் இந்த வழக்கு இட்டுக் கட்டப்பட்டது என்று அப்துல் லாஹ்வின் வழக்கறிஞர் குறிப்பிட் டுள்ளார். 'தற்போதைய நிலையில் வழங்கப்படும் தீர்ப்புகள் கருத்துக் கூற தகுதியற்றவை. முழுமையான நீதித்துறையும் குறைபாடு கொண் டது" என்றார். 

இராணுவ சதிப்புரட்சி மூலம் இஸ்லாமியவாதியான முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நீதித் துறையை தமது அடக்குமுறைக்கு கையாள்வதாக எகிப்து நிர்வாகத் தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. முர்சி மற்றும் அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல தலைவர்களும் மரணதண்டனை விதிக்கும் வாய்ப்புள்ள பல குற்றச் சாட்டுகளிலும் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர்.

No comments

Powered by Blogger.