Header Ads



போருக்கு தயாரகும் ரணில்..!

தேர்தல் போரொன்றை தாம் செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்திற்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்போது அரசாங்கம் பீதியடைந்துள்ளது. என்ன நடக்கின்றது என்பது பற்றி எவருக்கும் தெளிவில்லை. இதுதான் போர் புரிவதற்கான சிறந்த சந்தர்ப்பம்.

எந்தவொரு விடயத்திற்காகவும் நாம் பின்வாங்கக் கூடாது. ஏனைய அனைவரும் தங்களது பணிகளை உரிய முறையில் செய்தால், நான் என்னுடைய பணிகளை செவ்வனே மேற்கொள்வேன்.

போர் ஒன்றை செய்யும் போது அனைத்தையும் உடைந்தெறிந்த கொண்டு செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செய்ய வேண்டும்.

இராணுவமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நான் இன்று புத்தளம் வந்தேன். தாக்குதல் நடத்துவது, நெருப்பு பந்துகளை உருவாக்குவது, பீரங்கி வேட்டுகளைத் தீர்ப்பது போன்ற அனைத்த விடயங்கள் பற்றியும் உரிய நேரத்தில் சொல்லித் தருகின்றேன்.

நீங்கள் குழுக்களை உருவாக்குகள் நாம் தாக்குதல் நடத்தி இந்த போரை வெற்றிகொள்வோம். ஆண், பெண் என்ற பேதமின்றி நாம் போராடுவோம்.

நாம் அனைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற அவசியம் காணப்படுகின்றது.

நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியொன்றின் ஆட்சி அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்றே ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. It's time to go home mr.ranil you had enough , give the leadership to sajith or j.v.p

    ReplyDelete

Powered by Blogger.