பக்தாத் அருகே இஸ்லாமிய படைகள் - தற்கொலை தாக்குதலில் சவூதி அரேபிய 6 படையினர் மரணம்
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ராணுவத்தினர் மீது தற்கொலைபடை வாதி நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாயினர். ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள சலாஹிதீன் பிராந்தியத்தில் உள்ளது சமாரா நகரம். இது ஈராக்கியர்களின் புனித நகராகும். எனவே எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இப்பிராந்தியத்திலும் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இப்பிராந்தியத்தில் கடந்த 2006&ம் ஆண்டு முதல் இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலால் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ஈராக்கை ஆளும் ஷியா பிரிவு அரசை கவிழ்க்க சன்னி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தினந்தோறும் ஷியா பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈராக்கில் திக்ரித், சமாரா, மொசூல் உட்பட பல்வேறு நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சமாரா நகரில் நேற்று மதியம் தொழுகையின்போது ஈராக் ராணுவத்தினர் வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தற்கொலை படைவாதி ஏராளமான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தில் வந்து ஈராக் ராணுவத்தினர் மீது வேகமாக மோதி வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் ஈராக் ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இதேபோல், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி மற்றும் ஏமன் நாட்டு எல்லையில் நேற்று நடத்திய தற்கொலை படை தாக்குதலில்6 சவுதி வீரர்கள் பலியானார்கள். இதையொட்டி, சவுதி மற்றும் ஏமன் நாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
Post a Comment