இஸ்லாமிய தேச கலிபாவின் தலைக்கு 60 கோடி ரூபாய் சன்மானம் - அமெரிக்கா
ஈராக்கில், பிரதமர் நுாரி அல் மாலிகி அரசுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டு, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதியின் தலைக்கு, 60 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவால் தேடப்படும் அபுபக்கர் அல் - பாக்தாதி , ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும், ஈராக் அரசுக்கு எதிராகவும், பல செயல்களை நடத்தியவர். இவர் பிடியில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து, இஸ்லாமிய நாடாக, சமீபத்தில் அறிவித்துள்ள அல் - பாக்தாதி, தன்னை, 'காலிப்' என, அறிவித்துள்ளார். அதன் படி, உத்தரவுக்கு இஸ்லாமியர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment