மாணவி வயிற்றில் 6 மாதமாக தங்கிநின்ற பேனா
தைவான் நாட்டைச் சேர்ந்த மாணவி ஷிங் பாங் (வயது 20). இவர் ஒரு டாக்டரை அணுகினார். அப்போது, “எனக்கு தொடர்ச்சியாக வயிறு வலி இருந்து வருகிறது. இது சம்பந்தமாக ஒரு பொது மருத்துவரை சந்தித்தேன். அப்போது அவர் இதை சரிசெய்ய முடியாது என்று கூறினார். இதனால் நான் மனதளவில் பாதிப்படைந்துள்ளேன். மேலும். சரியாக சாப்பிட முடியவில்லை. படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை” என்று கூறினார்.
உடனே டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது 4 அங்குலம் நீளமுள்ள ஒரு பொருள் அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது. உடனே டாக்டர்கள் அவரது வாய் வழியாக கேமராவை வயிற்றினுள் செலுத்தி எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அது பேனா என தெரியவந்தது.
பின்னர் ஆபரேசன் மூலம் பேனாவை வெளியே எடுத்தனர். அப்போது அந்த பேனா வயிற்றினுள் உள்ள அமிலத்தால் அரித்துப் போய் இருந்தது. பேனா எப்படி வயிற்றுக்குள் வந்தது என்று தெரியவில்லை. தேர்வில் வெற்றி பெற்றதை மது அருந்தி கொண்டாடினேன். அப்போது பேனா வயிற்றுக்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறினார்.
Post a Comment