கண்டியில் ஒரு சூலில் 5 குழந்தைகளை பிரசவித்த தாய் (படங்கள்)
கண்டி பேராதனை வைத்திய சாலையில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் கிடைத்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு நை;து குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்துள்ளவர் (3.7.2014) கண்டி வெரல்லகம என்ற இடத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தனுஜா ஏக்கநாயக்கா என்ற சட்டத்தரணியாகும் .
மேற்படி குழந்தைகளுள் நான்கு ஆண்குழந்தைகள் என்றும் ஒன்று பெண் குழந்தையென்றும் தெரிவிக்கப் படுகிறது.
இதற்கு முன் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதியும் 2013 ஜூலை மாதம் 27ம் திகதியும் கண்டி வைத்திய சாலையில் இவ்விதம் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளிப் பெற்ற சம்பவம் இடம் பெற்றன.
அதில் ஒருவர் கேகல்லை ஹெட்டிமுல்லையைச் சேர்ந்த ஒரு பெண் மணியாவார். மற்றவர் மடவளையைச் சேர்ந்த சித்தி பர்சியா என்ற பெண்ணாகும். இவர் பெற்ற ஐந்து சிசுக்களும் மூன்று மாத கால இடைவெளியில் மரமடைந்தன.
வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர்.ஜயபந்து ஹேரத் இதுபற்றித் தெரிவிக்கையில் ஒரு குழந்தை குறிப்பிட்ட அளவு நிறையை கொண்டில்லாத காரணத்hல் உடனல குறைபாட்டுடன் இருப்பதாகவும் மற்றும் மூன்று சிசுக்களுக்கு செயற்கைச் சுவாசம் வழஙகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐந்து குழந்தைகளும் சிசுமுன் முதிர்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 30 வார கால முதிர்ச்சியின் பின் சிசேரியன் சத்திர சிகிட்சை மூலம் குழந்தை வெளி எடுக்கப்பட்டதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
Post a Comment