அளுத்கம பேருவளை சம்பவங்கள் உண்மையான கதை - 23 பௌத்த சங்கங்களின் அறிக்கை
(அஸ்ரப் ஏ சமத்)
இன்றைய சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகையில் 23 பௌத்த சங்கங்கள் இணைந்து அளுத்கம பேருவளை சம்பவங்கள் உண்மையான கதை என வெளியிட்டுள்ள அறிக்கையைப் பாருங்கள்-
முஸ்லீம்களே முதலில் பத்திராஜகொட தேரரை தாக்கியதாகவும், அதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. உடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாகவும், , இதற்கு எதிராக 15.06.2014 அளுத்கமவில் ராவணபலயவும், பொதுபலசேனாவும் இணைந்து ஏற்படுத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற பல பௌத்த இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்தாகவும் அதற்கு பொலிசார் அனுமதி வழங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து. அந்தக் கூட்டம் முடிந்து கலைந்து சென்றவர்களுக்கு தர்கா நகர் பள்ளிவாசலில் வைத்து முஸ்லீம்கள் ஒர் ஆமதுருக்கு கல்எரிந்தாகவும் அவர் உடன் மயங்கி விழுந்ததாகவும் அதற்கு பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லையாம். சிங்களவர்களுக்கு சொந்தமான வீடுகள். வெலிபபண்னையில் சிங்களவர்களது கடைகள் சேதமாhக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்களவர்கள்தான் நூற்றுக்கணக்கில் சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்களவர்களுக்கு நடந்தவற்றை ஊடகங்களுக்கு வெளிக்கெணர்வதற்கு தகவல் திணைக்களம் தடை விதித்தாகவும், ஆனால் சில முஸ்லீம் அரசியவாதிகள் முற்பட்டு இந்தப் பிரச்சினையை ஊடகங்கள் ஊடாக சர்வதேசமயமாக்கியதகாவும் இந்த அறிக்கையில் 23 பௌத்த இயக்கங்கள் கூட்டாகச் சொல்லியிருக்கின்றன.
இந்த ஆக்கத்தில் அருகில் முஸ்லீம்களது பற்றிய கடைகளையே சிங்களவர்களது கடைகள் பற்றியது போன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Muslims are not liars. because we believe on truth, we stand for truth and we fight for truth.
ReplyDeletewhy cant arrange for legal action against this news paper for false news with false pictures?
ReplyDeleteYa Allah!
ReplyDeleteMuslim may think many many monks support pbs, who knows how many buddhist organisation know about pure truth.
ReplyDeleteஅரசாங்கம் அவர்கள் கையில் எது வேண்டுமானாலும் செய்யலாம் பேசலாம் யார் கேட்பது ? இது தான் ஜன நாயக நாடு .அரசாங்கம் மற்றும் நம் அமைச்சர்கள் அனைவருமே மாறனும் அப்போதான் நாடு ஒரு நிலைமை பெரும் .
ReplyDelete