Header Ads



அரசாங்கத்திற்கு விரோதமான 200 இணையதளங்கள்

அரசாங்கத்திற்கு விரோதமான 200 இணைய தளங்கள் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் இவ்வாறு இணைய தளங்களை இயக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, அரசிற்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்துக்களை நிறுவும் நோக்கில் இந்த இணைய தளங்கள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சேறு பூசும் நோக்கில் இந்த இணைய தளங்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்கால தேர்தல்களை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு இணையத்தின் ஊடாக சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.