Header Ads



காஸாவில் இஸ்ரேல் அராஜகம் - 180 ராக்கெட்டுகளை ஏவிய ஹமாஸ் போராளிகள்


காஸா பகுதியில், இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட மேலும் 17 பேர் பலியாகினர். இதனையடுத்து கடந்த 2 நாள்களில், இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "இஸ்ரேலின் அனைத்து பகுதிகளை குறிவைத்தும் பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் புதன்கிழமை ராக்கெட்டுகளை வீசினர். அவர்களால் வீசப்பட்ட சுமார் 180 ராக்கெட்டுகள், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் விழுந்தன. 20 ராக்கெட்டுகளை "அயர்ன் டோம்' என்னும் இடைமறிப்பு சாதனம் மூலமாக நடுவானிலேயே இஸ்ரேல் தாக்கி அழித்தது.

அதைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 8 ஹமாஸ் இயக்கத் தலைவர்களின் வீடுகள், ஹமாஸ் இயக்கத்தினரின் 10 கட்டுப்பாட்டு மையங்கள், 10 சுரங்கங்கள் உள்பட 160 பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டுகள் வீசின.

பெயித் ஹனோனில் உள்ள இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் ஹமாத்தின் வீட்டின் மீதும் இஸ்ரேல் விமானம் குண்டு வீசியது. இதில் அவரும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பலியாகினர். இதுதவிர இஸ்ரேல் தாக்குதலில், 6 பெண்கள் மற்றும் 5 குழந்தைகளும் உயிரிழந்தனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.