Header Ads



அனாதையாக கிடந்த 16 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தஸ்லீமா ஹசன்

துபாயில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர், தஸ்லீமா ஹசன் அலி.

கடந்த வாரம் வழக்கம் போல் ஒரு கழிவறைய சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, அங்கு கேட்பாரற்று ஒரு பை அனாதையாக கிடப்பதை கண்டார். அந்த பையை எடுத்து, திறந்து பார்த்த போது உள்ளே கட்டுக் கட்டாக ஒரு லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 16 லட்சம் ரூபாய்) நோட்டுகள் கிடந்தன.

உடனடியாக அந்த பையுடன் ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்த தஸ்லீமா அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மிகக் குறைந்த சம்பளத்தில், மற்றவர்கள் அறுவறுப்படையும் வேலையை செய்து வந்த போதிலும், இவ்வளவு பெரிய தொகையை கண்ட பின்னரும், மனதின் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமலும், கடமை தவறாமலும் அதை போலீசில் ஒப்படைத்த தஸ்லீமாவின் நேர்மையை துபாய் போலீசார் பாராட்டியதாக உள்ளூர் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. அடேய் எருமைகளா அவல புகழுங்க அதே நேரத்தில அவளுக்கு ஒரு 2௦௦௦௦டிரகாம் சரி கொடுங்கலேண்டா பேர்ல போட்டு என்ன செய்ய சரியான கொம்பனியா இருந்தால் அவளுக்கு பதவி உயர்வு கொடுத்து சம்பளம் கூடி கொடுக்கணும்

    ReplyDelete

Powered by Blogger.