நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் 150 சீக்கியர்கள்
துபாயில் உள்ள அல் மனார் இஸ்லாமிக் செண்டர் வளாகத்தில் உள்ள மசூதியில் ரமலான் மாதத்தையொட்டி வழக்கம் போல் ’இப்தார்’ என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு துபாயில் உள்ள சீக்கிய குருத்வாராவான குரு நானக் தர்பார் உறுப்பினர்களான சீக்கியர்களுக்கு மசூதி நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பையேற்று, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இப்தார் விருந்தில் 150 சீக்கியர்கள் பங்கேற்றனர்.
‘இந்த விருந்தில் கலந்து கொண்டதன் மூலம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் நல்ல குணங்களை புரிந்துக் கொள்ள முடிந்தது’ என்று விருந்தினர்களில் ஒருவரான சுரேந்தர் சிங் கந்தாரி தெரிவித்தார்.
இந்த இப்தார் விருந்துகளை நடத்தி வரும் அஹமது ஹாசிம் என்பவர் கூறுகையில் .‘இதைப் போன்ற விருந்துகளில் சர்வ மதத்தினரையும் பங்கேற்க வைப்பதன் மூலம் ரமலானைப் பற்றி அவர்களும் உணர்ந்துக் கொள்ளும்படி செய்ய முடியும். இதில் பங்கேற்றவர்களில் பலர் முந்தைய கருத்து வேற்றுமைகள் நீங்கி சென்றனர்.
இதே போல் துபாயில் உள்ள கோயில்கள், கிருஸ்துவ தேவாலயங்களுக்கும் சென்று, எங்கள் இப்தார் விருந்துக்கு வருமாறு அவர்களை அழைத்துள்ளோம்.
இங்குள்ள சில கிருஸ்துவ தேவாலயங்களின் நிர்வாகிகள், தங்களது வார வழிபாட்டுக்கு பின்னர் போதனை நிகழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.
Post a Comment