அளுத்கம வன்முறை - 117 பேர் கைது, 3 தேரர்களிடம் விசாரணை
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் கடந்த தினத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
இவர்களில் 88 பேர் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 25 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் வித்தாரதெனிய நந்த தேரரிடம் குற்றவிசாரணை பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிஹல ராவய அமைப்பின் உறுப்பினர் அக்மீமன தயாரதன தேரரிடமும் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment