10 அம்ச அரசியல் மறுசீரமைப்புத் திட்டத்துடன் வருகிறார் சந்திரிக்கா
தீவிர அரசியலில் மீளப் பிரவேசிப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வரும் ஓகஸ்ட் 24ம் நாள் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களாக லண்டனில் விடுமுறையைக் கழித்த சந்திரிகா தற்போது சிறிலங்கா திரும்பியுள்ளார்.
அவர், தீவிர அரசியலில் மீளப்பிரவேசிப்பது குறித்த அறிவிப்பை வரும் ஓகஸ்ட் 24ம் நாள், பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் முறைப்படியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது அவர் தனது 10 அம்ச அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்கவுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சிமுறையை ஒழித்தல், பொது வாழ்வில் ஊழலையும், மோசடியையும் ஒழித்தல், ஆகியனவும் அவரது இந்த 10 அம்சத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சநரத் பொன்சேகாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
எனினும், சந்திப்புக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment