0/L பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்திபெறாதவர்கள் 2 வருடத்திற்குள் பெறுபேற்றை பெறமுடியும் என்ற உறுதிமொழியுடன் உயர் தரத்தை பயில வாய்ப்பு
சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்திபெறாத மாணவர்கள் இரண்டு வருடத்திற்குள் கணிதப்பாடத்தில் பெறுபேற்றை பெறமுடியும் என்ற உறுதிமொழியுடன் உயர் தரத்தை பயலுவதற்கான வாய்ப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான, அமைச்சரவை பத்திரம் நாளை அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சரவை அனுமதி கிடைக்குமாயின் கடந்த வருடத்தில் சாதாரணப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெறாத மாணவர்களுக்கும் எதிர்வரும் வருடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு கணிதம் உள்ளிட்ட 3 பாடங்கஙளில் சித்தி பெறவேண்டியது கட்டாயம் என கல்வியமைச்சரினால் சுற்றுநிரூபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது தடவையில் கணிதப்பாடத்தில் சித்திபெறாத மாணவர்கள், எதிர்வரும் ஒருவருட காலப்பகுதியில் கணிதப் பாடத்தில் சித்திபெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக ஊவா மாகாண பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், கல்வியமைச்சர் பந்துலகுணவர்தனவுடன் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தி;ட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய மூவாயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் அதுதொடர்பான விதிமுறைகள் தொடர்பாக ஆசிரிய விண்ணப்பத்தாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தலைமையில் நாளை மறுதினம் முற்பகல் 09 மணிக்கு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..
கணித பாடத்தின் பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணத்தைக் கண்டறிவதற்கோ அல்லது கண்டறிந்த காரணத்திற்கு தீர்வு காணவோ துப்பில்லாத கல்வி அமைச்சின் கையாலாகாத்தனத்தை மழுப்பும் முயற்சி இது!
ReplyDeleteஇப்படியே போனால் ஓல் எழுதி சித்தியடையாமலே ஏஎல் படிக்கலாம் என்பார்கள் ஒருநாள்.