Header Ads



பிரித்தானியாவில் நோன்புப் பெருநாளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி மற்றும் முஸ்லிம்களின் பண்டிகையான நோன்புப் பெருநாள் என்பவற்றை வங்கி விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளை வலியுறுத்தும் விண்ணப்பமொன்று இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

சுமார் 119605 பேரின் கையெழுத்துக்களை உள்ளடக்கிய இந்த விண்ணப்பம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

2011 ஆம் ஆண்டு விதிகளின் பிரகாரம் குறைந்தது 100000 கையொப்பங்களுடன் இணையத்தளத்தில் வெளியிடப்படும் முறைப்பாடு அல்லது விண்ணப்பத்தை பாராளுமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி விண்ணப்பம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் அல்லாத மதத்தவர்களுக்கான விடுமுறை தினங்கள் முதல் தடவையாக நடைமுறைப்படுத்தப்படும். 

பிரித்தானிய தேசியவாதிகள் சென் ஜோர்ஜ் தினம் சென் டேவிட் தினம்  என்பவற்றை விடுமுறை தினங்களாக பின்பற்றக்கூடாது என முறைப்பாடு செய்திருந்த நிலையில் இணையத்தளம் மூலம் 34 கையெழுத்துக்களுடன் அத்தினங்களை விடுமுறை தினங்களாக அனுஷ்டிக்க விடுக்கப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.