பொதுபல சேனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு-2, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை 7 ஆம் திகதி குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே,பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வைத்து 'நாயே' என்று தன்னை அவமதித்ததாக வட்டரக்க விஜித்த தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைதிரி குணரத்ன நீதவானின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தார்.
அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நீதவான் சட்டத்தரணிக்கு பணித்தார். Tm
Post a Comment