நரேந்திர மோடியினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் - விமல் வீரவன்ச
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மோடியும் அவரது புதிய அரசாங்கமும் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளதுடன் இந்த பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குமாறு கூறியுள்ளார். இதனால் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால், ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவற்றினால் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகள் ஏற்பட்டு அரசாங்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி இலங்கை தொடர்பில் சாதகமாக செயற்படுவார் என சிலர் எண்ணுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் பிஜேவி ஆட்சியில் இருந்திருந்தால், போருக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால், அழுத்தங்களை சமாளிக்க முடிந்தது.
எவ்வாறாயினும் இலங்கை மக்களே நாட்டுக்கு எது நல்லது என்பதையும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார். இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுத்த அந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. இந்தியாவும் இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்க உள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா உட்பட ஏனைய நாடுகளை கையாளளும் போது உரிய முனைப்புகளுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
ஈணவும் விட மாட்டனுகள், நக்கையும் விட மாட்டானுகள்..! இந்த 13வது திருத்தச்சட்டத்த வச்சே 13 வர்சத்த கடத்திட்டனுகள்..! இதுக்கு பிறகும் இந்த அரசாங்கம் சிறுபான்மை இனருக்கு நன்மை செய்யும் என நம்புவது மடமை ..!
ReplyDelete