கொலைகாரர்களை விட கழுதைகள் மிகவும் சிறந்தவை - ஏ.எச்.எம். அஸ்வர்
புத்தளம் கழுதைக்கு இருக்கும் அறிவு கூட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வருக்கு இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்திருந்தமைக்கு அஸ்வர் பதிலளித்துள்ளார்.
அது குறித்து அஸ்வர் மேலும் தெரிவிக்கையில்,
கொலைகளை செய்த கொலைகாரர்களை விட கழுதைகள் மிகவும் சிறந்தவை. மனிதர்களை கொலை செய்த, மனிதர்களை சித்திரவதை செய்த ஜே.வி.பிக்கு ஒழுக்கமோ, கலாசார பண்புகளோ இல்லை.
ஜே.வி.பியினர் இந்த நாட்டை அழித்தவர்கள். எனக்கு அது பற்றி கவலையில்லை. எவ்வாறாயினும் கொலைக்காரர்களை விட கழுதைகள் சிறந்தவை.
புத்தளத்தில் இருந்து பண்டைய காலத்தில் மத்திய மலை நாட்டுக்கு கழுதைகளை பயன்படுத்தியே உப்பு கொண்டு செல்லப்பட்டது. கழுதை என்ற மிருகம் மனிதர்களுக்கு குறைந்த பட்சம் அப்படியான சேவையை செய்தது. கொலை செய்யவில்லை எனவும் அஸ்வர் கூறியுள்ளார்.
முந்திய செய்தி
புத்தளத்தில் இருக்கும் அறிவு குறைந்த கழுதையை விட அறிவற்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் உறுப்பினர்களும் உள்ளனர். அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களும் உள்ளனர்.
ஆளும் கட்சியின் தலைவருக்கு தேவையான வகையில் நியமிக்கப்பட்டவர்தான் அஸ்வர். எவர் பின்னால் சென்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்று வந்தையே அவர் எப்போதும் செய்து வந்தார். எந்த தேர்தலிலும் அவர் ஒருபோதும் போட்டியிட்டதில்லை.
தலைவர்களுக்கு தேவையான வகையில் நியமிக்கப்படும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக பேசும் எம்மை உறுப்பினர்கள் பேசும் போது குறுக்கீடு செய்து வருகின்றனர்.
அதற்காகவே இவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் குறித்து சிந்தித்து கேள்விகளை எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர் உண்மையிலேயே பெரும் தடையாக இருந்து வருகிறார்.
புத்தளத்தில் இருக்கும் கழுதைகளுடன் ஒப்பிடும் போது கழுதைகளில் இருக்கும் அறிவு குறைந்த கழுதைக்கு கூட அஸ்வரை விட அறிவு இருக்கும் எனவும் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment