சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் ஜனாதிபதிவேட்பாளராகுவேன் - ரோஸி சேனாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க வொஷிங்டனில் உள்ள NF பணியகப் பிரதானி கடாபி இஸ்மாயிலுடன் நேர்காணலில் கலந்துகொண்டார்.
கேள்வி
அமெரிக்க மற்றும் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தும் வகையில் கடந்த பெப்ரவரி மாதம் அதாவது ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பதாக 30 நிமிட கட்டணம் செலுத்தப்பட்ட பிரசார நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிரதான அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் வரி செலுத்துனர்களின் பெருந்தொகைப் பணத்தை எவ்வாறு நியாயப்படுத்தப்பபோகின்றது?
இந்தக் கேள்வி அரசாங்கத்திடம் கேட்கப்படவேண்டும் என்று நினைக்கினறேன். எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் எனது தனிப்பட்ட கருத்தைக் கூறுவதாக இருந்தால், யுத்தம் நிறைவடைந்ததோடு எமது நாட்டின் புதிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கம் நாடுகளுக்கிடையில் உள்ள உறவு மேம்படுத்த வேண்டும். இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த முக்கிய நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்படவில்லை. தற்போதும் அந்த நாடுகளுடடான உறவுகள் வலுப்படுத்தப்படவில்லை. நாம் சரியானவற்றை முன்னெடுப்பதில் தோல்வியடைந்துள்ளோம். நான் ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். யுத்தம் முடிவடைந்தததோடு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் கொண்டுவந்தது. ஆனால் அரசாங்கத்தினால் இந்த உறவுகளை வலுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
கேள்வி
நீங்கள் எப்போதேனும் ஜனாதிபதி வேட்பாளராக விரும்புகின்றீர்களா?
நிச்சயமாக, சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் வேட்பாளராகுவேன். பெண்களுக்கு அனைத்து விடயங்களையும் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றேன். ஹிலரி கிளின்டன், சோனியா காந்தி போன்றோரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளேன். அவர்கள் உலகத்தை வேறு விதத்தில் நோக்குகின்றனர். எனக்கு வேட்பாளராகும் சர்ந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நிறைவேற்ற முடியும். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பெண்ணொருவரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
Post a Comment