முஸ்லிம்களின் பொருட்களை சூறையாட திட்டமிட்டிருந்தனர் - அம்பலப்படுத்துகிறார் பிரதமர்
(உம்மு முஸ்அப்)
காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் நகரில் முஸ்லிம்களுக்குரிய கடைகளை இன்று உடைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறி விட்டு தொலைபேசி அழைப்பினை துண்டித்துக் கொண்டனர்.
இந்தத் தொலைபேசி அழைப்பு எனக்கு 1915ம் ஆண்டு கம்பளையில் ஆரம்பமான சிங்கள, முஸ்லிம் கலவரத்தையே ஞாபகப்படுத்தியது. இதனுடன் இதுபற்றிச் செயற்பட முற்பட்டேன் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.
1915 கலவரம் கஹட்டபிட்டிய பள்ளியிருந்தே ஆரம்பித்தது. தொழுகை நடந்துகொண் டிருக்கும்போது, அங்கு வந்த பெரஹரா காரர்களிடம் தொழுகை முடியும்வரை சற்று மேளம் அடிப் பதை நிறுத்துமாறு கேட்டபோது கல வரம் ஆரம்பித்து பின் முழு இலங்கை க்கும் பரவியது என்றும் பிரதமர் கூறினார்.
கடந்த வெசாக் தினத்துக்கு முன்னைய தினம் கம்பளையில் இடம் பெறவிருந்த பெரும் அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக வீதியில் இறங்கிய நாட்டின் இரண்டாவது பிரஜையான பிரதமர் இதுபற்றி விளக்குகையில் இவ்வாறு விளக்கினார்.
வந்த தொலைபேசி அழைப்பினையடுத்து கம்பளை பொலிஸாருடன் தொடர்பு கொண்டு ஏதாவது அவ்வாறான தகவல்கள் இருக்கின்றதா எனக் கேட்டேன். அவ்வாறான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்று சிறிய எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தார்கள். தூக்கப்பட்டிருக்கும் வெசாக் அலங்காரங்களுக்கு பாதையில் செல்பவர்கள் ஏதும் செய்தால் பிரச்சினை வரும் என்றே அதிபர் அவற்றை அகற்றுமாறு கேட்டுள்ளார். இதனைத்தான் அங்குள்ள ஆசிரியை ஒருவர் வேறுவிதமாகக் கூறியுள்ளார். வெசாக் அலங்காரங்கள் கிழித்து வீசப்பட்டதாக கதையைப் பரப்பி விட்டார்கள். இதில் உண்மையே இல்லை.
கம்பளை சாஹிராக் கல்லூரிக்கெதிராக இந்த ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை கிழித்துப் போட்டதாகக் கூறி பரப்பப்பட்ட பிரசாரத்தின் பின்பே இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனது மற்றைய வேலைகளை நிறுத்திவிட்டு உடனே நகருக்குச் சென்றேன். அப்போது நான்கு பிக்குகளும் மற்றும் சிலரும் ஊர்வலம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த இடத்துக்கு நான் சென்று நாளை வெசாக் தினம். புத்த பெருமானாரின் முக்கிய தினம். இந்த நாளில் இப்படிச் செய்வது நல்லதா எனக் கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. உடனடியாக அவர்களை அருகிலுள்ள விகாரைக்கு அனுப்பி கேட்டினை மூடிவிடுமாறு பொலிஸாருக்கு உத்தர விட்டேன்.
உடனடியாக இந்த ஊர்வலத்துக்கு எதிராக எனது ஆதரவாளர்களுடன் இணை ந்து ஊர்வலம் ஒன்றை நடத்தினோம். முச்சக்கர வண்டி ஒன்றில் ஒலிபெருக்கியைப் பொருத்தி தேசிய ஐக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஊர்வலத்தில் சென்றேன்.
அத்தினத்தன்று கடைகளைத் தாக்கி பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு சிலர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக லொறிகளை தயார்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார்கள். அவ்வாறு லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கும் நான் சென்று பேசினேன்.
அந்த லொறிச் சாரதி ஒருவர் நான் போனதும், நீங்கள் வந்தது நல்லது. இல்லாவிடின் நகரத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று நல்லவர் போல் பேசினார். நானும் அப்படித்தான் என்று கூறிவிட்டு வந்தேன். கம்பளை சாஹிராக் கல்லூரி எனது பாடசாலை. அது முஸ்லிம் கல்லூரி. அங்கு வெசாக் கொண்டாட வேண்டியதில்லை. அப்படியிருக்க வெசாக் தினம் அனுஷ் டிக்கப்பட்டது. அங்கு பிழையாக எது வும் நடக்கவில்லை.
வெசாக் கொண்டாடப்பட்ட அந்த மண்டபம் அருகே ஒரு பாதை செல் கின்றது. அதில் போகும் யாராவது தூக்கப்பட்டிருக்கும் வெசாக் அலங்காரங் களுக்கு ஏதும் செய்தால் பிரச்சினை வரும் என்றே அதிபர் அவற்றை அகற்றுமாறு கேட்டுள்ளார். இதனைத் தான் அங்குள்ள ஆசிரியை ஒருவர் வேறு விதமாகக் கூறியுள்ளார். வெசாக் அலங்காரங்கள் கிழித்து வீசப்பட்டதாக கதையைப் பரப்பி விட்டார்கள். இதில் உண்மையே இல்லை.
அன்று நான் வீதியில் இறங்கி இதனைத் தடுக்காவிட்டால் சில நேரம் முழு நாட்டுக்கும் இது வியாபித்திருக்கும். பிரதமராக இருந்து கொண்டு வீதியில் இறங்கியது நல்லதல்ல என சில அமைச்சர்கள் என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுக்குச் சொன்னது. தான் அப்படி இறங்காவிட்டால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். அதனாலே பதவிகளைப் பற்றி சிந்திக்காது நான் களத்தில் இறங்கினேன் என்று அவர்களுக்குப் பதிலளித்தேன். இதற்கு முன்பும் மாவ னல்லைச் சம்பவத்தின் போதும் இது இங்கு பரவாதிருக்க இரவிரவாக நகரில் நின்று கொண்டு நான் நகரைப் பாதுகாத்தேன்.
1988ஆம் ஆண்டு கலவரத்தின் போது தோட்டத்தில் ஒரு தனியாக வாழ்ந்த பெண்மனி இருந்தார். சிலர் அவரைக் கொன்று விட்டு சொத்துக்களைப் பகிர் ந்து கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர். அவர் பயந்து வீட்டிற்குள் கதவுகளை மூடிக்கொண்டிருந்தார். அவரை அழைத்து வருமாறு எனது சகோதரனை அனுப்பி னேன். அவர் வெளிவரவில்லை. உடனே நான் அங்கு சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர் களை அழைத்து வந்து எனது வீட்டில் வைத்து உடனடியாக உணவு வழங்கி, சாஹிராக் கல்லூரியில் அவர்களைத் தங்க வைத்தேன். நகரிலிருந்து பல தமிழ்க் கடைகளையும் அப்படிப் பாது காத்தேன்.
நான் இருக்கும் வரை எந்த ஓர் இனத்துக்கு அநியாயம் ஏற்பட இடமளியேன். எல்லோரும் எனது மக்கள். அவர்களைப் பாதுகாப்பது எமது கடமை. அதனையே அன்றும் இன்றும் நான் செய்து வருகிறேன்.
யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தை நசீபாக்குவாயாக............ ஆமீன்
ReplyDeleteநல்ல காலம் முஸ்லிம் அமைச்சர்களிடம் இதை சொல்லவில்லை, சொல்லி இருந்தால் கலவரம் முடிய வந்து, நட்டஈடு தருவதாய் சொல்லி விட்டு அதிலும் ஒரு தொகை பணத்தை சுருட்டி இருப்பார். அல்லாஹ் இந்த நல்ல மனிதருக்கு ஹிதாயத்தினை அருள் செய்யட்டும்..!
ReplyDeleteஇது பிரச்சினைக்கு முன்பு ஆகவே பிரதமருக்கு இப்பிரச்சினை ஆரம்பிக்கும் முன் தகவல் தெரிந்திருக்கின்றது. இது ஒரு முக்கியமான யோசிக்கவேண்டிய விடயம்.
ReplyDeleteஅப்போ அளுத்கம பெருவல முடிவு திட்டமிடப்பட்டடட்கு இன்னுமென்ன ஆதாரம் தேவை ???
ReplyDelete