ஈராக் நோக்கி அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு - ஈரானும் அமெரிக்காவுடன் இணைவு
ஈராக் நெருக்கடி நிலைக்கு மத்தியில், ஈராக்கிய கடற்பரப்புக்கு அமெரிக்கா தமது யுத்தக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
பாரிய எண்ணிக்கையான யுத்த விமானங்களுடன் இந்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை நடத்தி இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ஈராக்கிற்கு இராணுவம் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.
இதன்படி இந்த கப்பல் நேற்றையதினம் முதல் வடக்கு அரபிக் கடலில் இருந்து ஈராக் நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஈராக்கின் முஸ்லிம் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயற்பட விருப்பதாக, ஈரான் அறிவித்துள்ளது.
ithu allakudaya paday ithai yarrallum allika mudiyathu
ReplyDeleteஈராக்கில் உள்ள தக்கிரி ISIL தீவிரவாதிகளுக்கு எதிராக ஷியா முஸ்லிம் சுன்னி முஸ்லிம் என்று ஒன்றரை மிலியந் படையொன்று தாமாகவாகவே இணைந்துள்ளனர் .... இந்த ISIL அல் காய்தா ...தலிபான்கள் கூட்டு அமைப்புக்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போது மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள் ISIL கூலிப்படை யாரும் இஸ்ரேல் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்களாம் இது வெறும் .அமெரிக்க இஸ்ரேல் கூத்தும் நாடகமும்தான்..... ...ஜிஹாத் பிரகடனங்கள் எல்லாம் எராக் முஸ்லீகளுக்குள்தானாம் .....இவனுகள் எல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டத்தான் சரி
ReplyDelete