Header Ads



அளுத்கம பிரதேசத்தில் பதற்றம்

(Vi)

களுத்துறை, அளுத்கம பிரதேசத்தில் பிக்கு பயணித்த வாகனத்தின் சாரதியை நபரொருவர் தாக்கியதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அளுத்கம, பாடகொட பிரதேசத்தில் பிக்கு ஒருவர் தனது சாரதியுடன் வாகனத்தில் சென்றுள்ளார். இதன்போது வாகனம் செல்லமுடியாதளவிற்கு சிலர் வீதியில் இடையூறாக நின்றுள்ளனர். ஒலியெழுப்பியும் குறித்த நபர்கள் பாதையை விட்டு விலகாமையால் கோபமடைந்த வாகன சாரதி தகாத வார்த்தைகளால் பாதையில் நின்றவர்களை திட்டியுள்ளார்.

இதனையடுத்து இரு பிரிவினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட பின்னர் கைகலப்பானது. பின்னர் சாரதியை அங்கிருந்த நபர் ஒருவர் தாக்கியுள்ளதுடன் பிக்குவையும் தாக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடிய  பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபரை வெளியில் விடுமாறும் தாம் அவரை தாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவுவதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.