உணர்ச்சிகளுக்கு அடிமையாகி வீண் பிரச்சினைகளில் சிக்குப்பட வேண்டாம் - வக்பு சபை
அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் முஸ்லிம்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்த போதும் அவர்கள் பொறுமை காத்து அல்லாஹ்விடம் இறைஞ்சவேண்டுமென வக்புசபை தலைவர் அஹ்கம் உவைஸ் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் அவதானத்துடனும் மிகவும் கவனமாகவும் விடயங்களைக் கையாள வேண்டிய காலகட்டமிது. வீணான உணர்ச்சிகளுக்கு அடிமையாகி வீண் பிரச்சினைகளில் சிக்குப்பட வேண்டாமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இஸ்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறுகின்றது. எனவே என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் இறைவனிடம் பிரார்த்திப்போம் எனத் தெரிவித்துள்ள அவர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கத்தில் பொறுமை குறித்த விடயங்களை எடுத்தியம்புமாறு கதீப்மார். மெளலவிமார்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்காப்பு, பதவியில் உள்ளவர்களின் கடமைகள், இது பற்றி சொல்லவதில்லையா?
ReplyDelete