Header Ads



இலங்கையை போன்று உலகின் வேறு எங்கிலும் சகவாழ்வினை பார்க்க முடியாது - பிரதமர்


பௌத்த மதத்தை பாதுகாத்து போசிப்பதற்கு அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அரந்தலாவை பௌத்த பிக்குகள் கொலை தொடர்பான நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐந்து மதங்களை வழிபடும் நான்கு இன மக்கள் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான ஓர் சகவாழ்வினை பார்க்க முடியாது. அநேக நாடுகளில் இன, மத மற்றும் மொழி பிரிவினைகள் காணப்படுகின்றன.

இலங்கையில் நிலவும் சமாதானத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிங்கள இனம் இன்றைக்கும் தலைதூக்கியுள்ளது.

மெய்யான பௌத்தர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பௌத்த மதத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். புத்தரின் வழிகாட்டல்களை பின்பற்றும் எவரும் பிழையான வழியில் செல்ல மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.