மஹிந்தவும், மோடியும் சரியான ஜோடி - ஏ.எச்.எம்.அஸ்வர்
சச்சதீவு இலங்கையின் சொத்து. அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோகராஜன் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அஸ்வர் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அநியாயம் எங்கு இடம் பெறுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுப்பதற்குத் தயங்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் கூடியது. அஸ்வர் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
நேற்றைய தினத்தில் இந்த சபையில் கேள்வி ஒன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மோடி மஹிந்தவுக்கு என்ன கூறினார். என்று கேட்டாரே தவிர மோடியை சந்தித்த ஜெயலலிதாவிடம் அவர் என்ன கூறினார் என்று கேள்வியைத் தொடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமரால் அழைக்கப்பட்டிருந்ததால் அவரும் பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
எப்படி இருப்பினும் ஸ்ரீமா பிரகாரம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது. கச்சதீவு இலங்கையின் சொத்து அது எமது நாட்டின் முத்து ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் கச்சதீவை கொடுக்க மாட்டோம்.
மேலும் மீனவர்களின் பிரச்சினை குறித்து நான் குரல் கொடுத்து வருகின்றேன். இந்த பாராளுமன்றத்தில் மாத்திரம் அல்ல கைட்ஸில் அநீதி இடம்பெற்றாலும் அங்கு சென்றும் குரல் கொடுப்பேன்.
மஹிந்தவும் மோடியும் சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி. இந்த ஜோடி இந்திய மக்கள் மட்டுமல்லாது இலங்கை மக்களினதும் இறைமையைப் பாதுகாக்கும்.
இங்கு இந்த பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆறுமுகன் இருக்கின்றார். திகாம்பரம் எம்.பி. இருக்கின்றார். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோகராஜன் எம்.பி.யும் புலிகளின் அடியர்களாக இருக்கின்றனர். புலம்பெயர் சமூகத்தினருடன் இணைந்து நாட்டைப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
Ungalukku vera aakkalda news kedekkeliya. Poyyarkalin seythikalai thavirppathu JM kku nallathu enru ninaikkiraen
ReplyDeleteஜப்னா முஸ்லிம் இற்கு ஒரு வேண்டுகோள்..! தயவு செய்து இந்த கூஜா எம்.பி.யின் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..! இவ்வாறானவர்களால் நாட்டுக்கும் நன்மை இல்லை, சமூகத்திற்கும் நன்மை இல்லை..!
ReplyDelete