Header Ads



கிழக்கு முதலமைச்சர் பதவி கேட்டு சண்டையைத் துவங்கிய முஸ்லிம் காங்கிரஸ், வேண்டாம் என்று ஒப்பாறி...!

(நஜீப் பின் கபூர்)

இது ஒரு அரசியல் வேடிக்கை தொடர்பான கதை. இந்தக் கட்டுரையாளனைப்  பொருத்து தலைவர் அஸ்ரஃப் துவங்கிய மு.கா. அவர் மரணத்துடனே சிதைந்து - அழிந்து போன முஸ்லிம் சமூகத்தின் முகவரி. ஏதோ அந்தத் தலைவனின் நாமத்தாலும், மரத்தை ஒரு வியாபாரச் சின்னமாக அதன் தலைவர்கள் மக்கள் மத்தியில் சந்தையில் இன்று விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். 

அழுகிய பழங்கள், மரக்கறிவகைகளை மக்கள் குறைந்த விலையில் சந்தைகளில் வாங்குவதைப் போன்று ஒரு கூட்டம், அரசியல் சந்தையில் மரத்தை இப்போதும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதால் மர வியாபாரிகள் வாழ்கை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் வந்தால் கட்சி என்பார்கள் கிளைகள் என்பார்கள் புனரமைப்பு என்பார்கள்.

வேட்பாளர்களைத் தேடி  தலைவர்கள் கிராமங்கள் ஒழுங்கைகள் தோரும் புகுந்து  சமூகம் பற்றியும் பேசியும். வேட்பாளர்களின் வெற்றி பற்றி ஆசை வார்த்தைகள் சொல்லி ஏதோ அப்பாவிகளைப் போட்டு  தமது விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரி கையில் ஒப்படைப்பார்கள். தேர்தல் பிரசாரங்களின் போது மேடைகள் முழங்கும், உரிமைகள் பற்றிப் பேசுவார்கள் கீதங்களையும் இசைப்பார்கள். தேர்தல் நடக்கும், முடிவுகள் வெளி வரும். 

அவர்கள் மத்தியில் அடுத்த சண்டை துவங்கும். விருப்பு வாக்கு கொள்ளை நடந்து விட்டது என்று வெற்றி பெற்றவருக்கு எதிராக தோற்றுப் போனவர்கள் அணி சேர்ந்து போர்க் கொடி பிடிப்பார்கள். அந்தப் சோடா போத்தல் போராட்டம் சில நாட்களுக்குள் ஓய மு.கா.வில் போட்டியிட்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் கோபித்துக் கொண்டு தமது சூட்டைத் தனித்துக் கொள்வதற்காக ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கட்சி தாவல்களை அந்தச் சில்லறைகள் நடாத்திக் கொண்டிருப்பார்கள்.  

தலைவருக்கு காக்கா பிடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அஸ்ரஃப் மரணத்திற்குப் பின் பிறந்திருப்பதால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவருக்கு வேலியாக நின்று கொள்வதால் தலைவர்களும் ஏதோ எந்நாளும் தனக்குப் பின் ஒரு கூட்டம் இருந்து கொண்டுதானே இருக்கின்றது. என்ற நினைப்பில் அவர்கள் வியாபாரத்தைத் தொடர்வார்கள். 

கிழக்கில் படு மோசமான பிரதேச வாதம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவுவதால் தலைவர்கள் தொடர்ந்தும் சிம்மாசனத்தில் இருக்க முடிகின்றது. இந்த விடயத்தில் கிழக்கு அவலத்தைப் பார்க்கின்ற போது இன்னும் பல நூற்றாண்டுகள் - தலைமுறைகள் போனாலும் அங்குள்ள குறுநில வாதம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது தலைக்கு நன்றாகத் தெரியும். தலைவரும் தேவைக்கு ஏற்ப இதற்கு உரம் போடவும் மறப்பதில்லை.

இந்தப் பின்னணியல் போய் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரி தொடர்பாக மிகப் பிந்திய அசிங்கமான செய்திகளை நாம் வாசகர்களுக்குச் சொல்லலாம் என்று தோன்றுகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியவர்கள். முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலும், ஆளும் தரப்பின் பதவி பட்டங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் முதல்வர் பதவி தொடர்பாக  உடன்பாடு செய்திருக்கின்றோம். அதனால் ஆளும் தரப்பு முதல்வர் அப்துல் மஜீத் நஜீப்பிற்கு முதல் சந்தர்ப்பம். அடுத்து மு.கா.முதலவர் என்று மேடைகளிலும் ஊடகங்களிலும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

இப்படி காலம் நகர சில தினங்களுக்கு முன்னர் இப்போது முதலமைச்சர் எங்களுக்கு வேண்டும் என்று கோசம் போட அதிகாரம் படைத்தவரும் தேர்தல் ஒன்று விரைவில்  வருவதால் மரத்துக் காரர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இதோ பிடியுங்கள் முதலமைச்சரை என்ற சிக்னலைக் கொடுக்க மு.கா. முதலமைச்சர் பெருவதற்கு கூட்டம் போடுப் பார்த்த போதுதான் முஸ்லிம் சமூத்திற்கு அஸ்ரஃப் கொடுத்த முகவரிக்கு மு.கா.தலைவர்களே சானம் பூசிய மற்றுமொரு சந்தர்ப்பம் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்குத் தெரிய வந்தது.

மு.கா.வுக்கு முதல்வர் பதவி என்றால் சம்மாந்துறை மன்சூருக்கும் ஏறாவூர் ஹாபிசாருக்கும் இடையே ஆதிக்கப் போட்டி. தலைவருக்கு ஏறாவூர்காரருக்கு இந்தப் பதவியைக் கொடுப்பதில் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை. மனிதன் டேன்ஜரானவர் - குரங்கின் வேலை பார்ப்பவர். மற்றது அம்பாறை பெரும் நிலம் அதனை ஜீரணிக சங்கடப்படும். மன்சூருக்கு கொடுப்பது என்றால் நல்லது விசுவாசமாக இருப்பார் என்று தலைவரின் அடி மனசு  சொன்னாலூம் அதிலும் அவர்களுக்கே உரிய சிக்கல்..!

ஆளும் தரப்பு முதலமைச்சரை விட்டுக் கொடுப்பதானால் இரு அமைச்சுப் பதவிகளை அதாவது மன்சூர், ஹாபீஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அரசியல் நிலை. அவர்கள் விட்டுக் கொடுக்கின்ற இடங்களுக்கு நஜீப் ஏ மஜீட் மற்றும் அமீர் அலிக்கு மாகாண அமைச்சுப் பதவிகள் கிடைக்கும். இந்தத் தீர்வுக்கும் மு.கா. தலைவர்களால் இணங்க முடியவில்லை. 

இந்த நிலையில் அ.இ.ம.கா. அமீர் அலிக்கு இந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ள உரிமை கோரும். அமைச்சர் அதாவுல்லாவும் நஜீப் ஏ மஜீடுடன் இணங்கிப்போக விருப்பமில்லாத நிலையில் அமீர்; அலி முதல்வராக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனால் நஜீப்பை எங்கு வைப்பது என்ற விடயத்தில் ஆளும் தரப்பிற்குள் சிக்கல். என்றாலும் அந்த சிக்கலை சிறப்பாக சிந்தனையாளர் கையாண்டு வெற்றி பெறுவார் என்பது யதார்த்த நிலை.

அதிகாரம் படைத்த முதலமைச்சர் பதவியைத் தர சிந்தனையாளர் தயாரனாலும் மு.கா.வேண்டாம்...! வேண்டாம்...! என்று ஒப்பாறி வைத்து ஓட ஆரம்பித்திருக்கின்றது. இதுதானா முஸ்லிம் தலைமுறைக்கு மு.கா. காட்டுகின்ற அரசியல் நாகரிகம் என்று நாம் அவர்களை கேட்க வேண்டி இருக்கின்றது. 

முஸ்லிம் சமூகம், அஸ்ரஃப் கொடுத்த முகவரியை மீண்டும் தேடிப்பிக்க, மு.கா.வின் உண்மையான போராளிகள் குறிப்பாக இளைய தலைமுறை கட்சி மறுசீர் அமைப்புப் போராட்டங்களை கிராமங்கள், ஒழுங்கைகள் தோரும் நடத்தி, கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். இதனை விடுத்து நானும் மு.கா. எனது மகனும் மு.கா. பேரனும் மரத்துக்குத்தான் எறுவான் என்றால் முஸ்லிம் சமூகம் எந்த நாளும் அரசியல் வியாபாரிகளுக்கு ஏணியாக நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். 

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கான கட்சியாக மு.கா.வை  மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் இஞைர்கள் மறுசீரமைப்புப் போரட்டங்களில் காலதாமதமின்றி குதிக்க வேண்டும். அதற்கான வேலைத் திட்டமொன்று வடிவமைக்கப்பட வேண்டும். என்பது கட்டுரையாளன் அழைப்பாக இருக்கின்றது.     
              

3 comments:

  1. Good article. Thank you so much Mr. Najeeb bin Gafoor

    ReplyDelete
  2. நன்றாக சொன்னீர்கள் ,ஊருக்குள்ளே கட்சி சீர்படுத்துவதால் மட்டும் இது முடிந்துவிடாது
    உயர் பீடம்,அதி உயர்பீடம் போன்றவற்றில் இருந்து கொண்டு தலைவர் எதைச்சொன்னாலும் ஆமாச்சாமி போடுகின்ற எந்தப்பலனுமில்லாத,வியூகங்கள் வகுக்கத்‌தெரியாத ,எதிர்காலத்த்தை துல்லியமாக அணுக தெரியாத முட்டாள்களை அந்த இடத்த்தில் இருந்து உடனடியாக அகற்றுவதுடான் மிகவும் பிரயோசனமான முறையில் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புடன் சேவை செய்யக்கூடிய மூளைசாலைகளையும் மக்கலாதரவு உள்ளவர்களையும் மட்டும் உள்வாங்க வேண்டும்,குறிப்பாக தலைவரை தட்டிக் கேட்க வேண்டும், ,அப்படி மக்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காத தலைவரை தூக்கி வீச வேண்டும், ஹகீமால் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்க முடியாது அதற்கு அவரிடம் தெம்பும் இல்லை,முஸ்லீம்களுக்கென அமைக்கப்பட்ட இந்தக்காட்சியை வெட்டி வீழ்த்துவதை விட இந்தக்காட்சியில் ஓத்தியிருந்து சாற்றை உருஞ்சுகின்றவர்களை கட்சியில் இருந்து அகற்றிவிடுவதே சிறந்தது.முடியுமென்றால் கடந்த காலத்த்தை மன்னித்த்து கட்சியில் இருந்து பிரிந்தவர்களை சேர்த்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைவரின் சொந்த ஆசா பாசங்களுக்காக மக்களது நலன்களை நாம் ஒருபோதும் தாரை வார்க்க முன்வரக்கூடாது .முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குருட்டுத்தனமாக கட்சியை ஆதரிப்பதோடு மட்டும் நின்று விடாமல் கட்சியின் ஒழுங்கமைக்கப்படாத கட்டமைப்பு மீண்டும் சிறந்த முறையில் உருவாக்கப்படுவதற்கு பிரதேச ரீதியாக அழுத்தம் கொடுக்க போராட வேண்டும்,கொழும்பில் இருந்து வரும் தமது பிரதி நீதிகளை சந்தித்த்து சந்தோசப்பட்டு அவர்கள் கூறுப்பவற்றை ஆவென்று கெட்டுக்கொண்டிருந்து வந்து வீதியில் மக்களிடம் அவர் அப்படிச்சொன்னார் இப்படிச்சொன்னார் என்று புளுகித்‌த்திரியாமல் , அவ்வர்களுடன் பேசும் சந்தர்ப்பங்களைல் தமது மக்களது அபிலாஷைகளை முன்வைத்த்து அவை நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அழுத்தங்களாப்பிரயோகிக்க வேண்டும்,மத்‌துமன்றி அது தொடர்பில் தொடர்ந்து வினவிக்கொண்டே இருக்க வேண்டும். கட்சியின்

    ReplyDelete
  3. தற்பொழுது உள்ள சுயனலத்தலைவன் உள்ளவரை ஒருகாலமும் இந்த மு.கா இனை கட்டி எழுப்பினாலும்..! முஸ்லிம்களுக்கு பயனில்லை..! கட்சிக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக கட்சி ஒன்று தேவை..!

    வடக்கில் ரிசாட் ஐயும், கிழக்கில் அதாவுல்லாவையும் அழிப்பதை தவிர அவர்களி கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேறு எதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை..!

    ReplyDelete

Powered by Blogger.