தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பது ஆட்சியாளரின் சோதிடர்களே - சரத் பொன்சேக்கா
நாட்டில் தற்போது தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பது தேர்தல்கள் ஆணையாளர் அல்லவென ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து:-
“இந்த நாட்டில் தற்போது தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பது தேர்தல்கள் ஆணையாளர் அல்ல. அதன் காரணமாகவே நாம் அண்மைக் காலமாக மேடைகளில் ஒரு விடயத்தை கூறி வந்தோம். தேர்தல் ஆணையாளர் எனும் ஒரு வெருளி பொம்மை இருப்பதாக கூறினோம். அத்துடன் நாட்டின் ஆட்சியாளர்களின் சோதிடர்களும் இவ்வாறு திகதி நிர்ணயிக்கின்றனர். தற்போது பொது வேட்பாளர் என்ற காய்ச்சல் நாட்டில் பரவ ஆரம்பித்துள்ளது. நாட்டில் காணப்பட்ட நிலமைகளைக் கருத்திற் கொண்டு கடந்த முறை பொது வேட்பாளர் நியமிக்கப்பட்டார். எனவே தற்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை இறக்கினாலே இந்த ஆட்சியாளர்களை தோல்வியடையச் செய்ய முடியும். அவ்வாறு களமிறங்கும் நபர் சிறந்த திட்டத்துடன் களமிறங்க வேண்டும். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை வீட்டிற்கு அனுப்பினால் மாத்திரம் நாட்டு மக்களின் பசி தீரப் போவதில்லை.”
Post a Comment