என்னை கட்சித்தலைவராக அங்கீகரிக்காதது அபத்தமானது - ரவூப் ஹக்கீம் சீற்றம்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரிக்காமை அபத்தமானது என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.
அவையில் அறிக்கை ஒன்றை விடுக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்காததையடுத்தே ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
கட்சித் தலைவர் என்ற வகையில் நிலையியற் கட்டளை 23(2)க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கூறிய ரவூப் ஹக்கீம் தம்புள்ளை பள்ளிவாசல் பற்றி ஓர் அறிக்கையை விடுக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார்.
நியதி சட்டத்தில் கட்சித்தலைவர் என்ற வகையில் அறிக்கை ஒன்றை விடுக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், நாடாளுமன்றில் நான்கு கட்சி தலைவர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறினார்.
மேலும் அறிக்கை ஒன்றை விடுக்க முன்னர் இந்த விடயத்தை ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டுமென அவர் கூறினார்.
இதை ஆட்சேபித்த ஹக்கீம் தன்னை கட்சித்தலைவராக அங்கீகரிக்காதது அபத்தமானது என்றார். அப்படியாயின் தனக்கு ஏன் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார். இது அர்த்தமற்றது என அவர் கூறினார்.
இச்சமயத்தில் குறுக்கிட்ட எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹக்கீம் இந்த பிரச்சினையை அமைச்சரவையில் எழுப்ப வேண்டும். அரசாங்கம் திருப்தியான முடிவை தராதுவிடின் அவர் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கூறியதுடன் கடந்த பொது தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்டது என்பதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.
ஐ.தே.க செய்வதறியாத நிலையில் உள்ளதால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திலிருந்து விலக வைப்பதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வமாக இருப்பதாக ஹக்கீம் பதிலடி கொடுத்தார்.
vinai vithathavan vinai aruppan
ReplyDeletethinai vithavan thinai aruppan
புலியாக சீரினாரா....பூனையாக சீரினாரா... என்பதை பொறுத்திருந்து பார்போம்.
ReplyDeleteEeven non Muslims today realised that you are not representing Muslim Community. We are sure you will be thrown out soon from our community as well. Also we heard Sinhalese political parties are going to put stop for you to seek cabinet post for your own perks and privilage.
ReplyDeleteIt is hight time for you and your mafia group to stop miss use the logo of Muslim Congress.
Well done deputy speaker and opposition leader keep it up!
எதிர் கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சினை அதனால் தான் ஆசாத் சாலி மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மூலம் முயன்ற அரசும் தப்போது நேரடியாக களத்தில் இரங்கி உள்ளது, ஹகீம் மாறலாம் அல்லது மாற்றப்படலாம் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் திடமானதாக இருக்கணும், முஸ்லிம் காங்கிரஸ் அழியக்கூடாது ஏனைய எந்த முஸ்லிம் கட்சியும் உலகளவில் அறியப்படவில்லை அதனால் தான் அவைகளுக்கு இந்த பெரும் கட்சிகள் மூலம் எந்த எதிர்ப்பும் இல்லை இந்த உண்மையை முஸ்லிம் குரல் வானொலியும் அதில் பேசும் அரசியல் ஆய்வாளரும் புரிந்து கொள்ளனும்.
ReplyDeletePlease, Try to start a new business or keep your existing business growing..this is high time, you to go out.
ReplyDeleteWhat is the use of your's for us????
always broken promises. you are not a suitable person to lead the community.