Header Ads



இலங்கையும், செயிட் அல் ஹுசெய்னும்..!


ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் செயிட் அல் ஹுசெய்ன், சிறிலங்கா விவகாரத்தில் கடுமையான போக்கை வெளிப்படுத்துவார் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது. 

போர்க்கால பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பிந்திய இன நல்லிணக்கம் ஆகிய விவகாரங்களில், சிறிலங்கா அரசாங்கம் வரும் மாதங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், பக்குவப்பட்ட மனிதஉரிமை ஆர்வலரான செயிட் அல் ஹுசெய்ன், கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடும். 

பணியில் இருந்து விலகும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த மாதம், நியமிக்கவுள்ள விசாரணைக் குழு, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய சிறிலங்காவுக்குச் செல்லவுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடிமரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து விட்டது சிறிலங்கா. 

இந்தநிலையில் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாது என்று கொழும்பு அதிகாரபூர்வமற்ற வகையில் கூறியுள்ளது. 

இது அதிகாரபூர்வமான முடிவாக இருந்தால், செயிட் அல் ஹுசெய்ன், மனித உரிமை தவறுகளை சரிசெய்யும், அனைத்துலக தலையீடுகள் குறித்த தனது கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து கடுமையான நிலையை எடுக்கக் கூடும். 

2010இல் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை வெளியே இருந்து தகவல்களைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியது போல, இவரும் கோரக் கூடும். 

செயிட் அல் ஹுசெய்னின் பெயரை ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூனே முன்மொழிந்துள்ளதால், சிறிலங்கா விவகாரத்தில், அவர் பான் மூனின் நிலைப்பாட்டிலேயே இருப்பார் என்பதையே காட்டுகிறது என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசேய்ன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும் கடும்போக்கை கடைப்பிடிப்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மோசமான இந்த நேரத்தில், இவரது நியமனம் வந்திருக்கக் கூடாது என்று நன்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போருக்குப் பிந்திய விவகாரங்களில், ஜோர்தானிய இராஜதந்திரி, சிறிலங்காவுடன் மிகமோசமான முரண்போக்கைக் கடைப்பிடிப்பாரா என்று எழுப்பிய கேள்விக்கு, பிந்திய நிலைமைகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு தயார் நிலையில் இருப்பதாக, நவநீதம்பிள்ளை, சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தியுள்ள நேரத்தில், பான் கீ மூனின் இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஜுலைக்கும் நொவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், விசாரணைக் குழு சிறிலங்காவுக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றின் ஆதரவு இருந்தும், இந்த விசாரணைக்கான நிதியைத் தாமதப்படுத்தி, தடுக்கும் முயற்சிகளில் சிறிலங்கா தோல்வி கண்டுள்ளதாக நன்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நியுயோர்க்கின் இந்த நகர்வை முறியடிப்பதற்கு, குறைந்தபட்சம் ஒரு உள்ளக விசாரணை தேவை என்றும் அந்த வட்டாரங்கள் வலியுறுத்தின.

இளவரசர் செயிட் அல் ஹுசேய்னின் நியமனத்துக்கு, ஐ.நா பொதுச்சபையின் அங்கீகாரம் தேவை என்ற போதும், மேற்குலக நாடுகளின் ஆதரவு கிடைப்பது உறுதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவநீதம்பிள்ளை மேற்குலகுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருக்காவிடினும், சிறிலங்கா விவகாரத்தில் கடும் போக்குடையவராக இருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தநிலையில்,  சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தை மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது தேசிய நலனுக்கு விரோதமாகி விடும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர்,தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.