இலங்கையில் ஓர் தொடர் நாடகம் - அல்லாஹ் ஒருவனை போற்றி புகழ்ந்தவனாக..!
(மொஹமட் ரிப்ளான்)
இலங்கையில் மூன்று தசாப்தமாக நிலவிய கொடூர விடுதலை புலிப் பயங்கரவாதம் எனும் நாடகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் மற்றுமொரு தொடர் நாடகம் அரங்கேற்றப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ் வேளையில் உங்களுடன் ஒரு சில நிமிடங்கள் எந்தவொரு நாடகமும் ஒரு இயக்குனர் இல்லாமல் அரங்கேற்றப்படுவதில்லை. அதற்கு விதிவிலக்கில்லாமல் இந் நாடகத்திற்கும் ஒரு இயக்குனர் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் இவ்வியக்குனரை அறிவதென்பது தும்பில் நார் பிடுங்குவது போன்றதாகும்.
இந் நாடகம் சொல்ல வரக்கூடிய செய்தியை முழு உலகும் அறிந்திருப்பினும் அதற்கு ஒரு பொருத்தமான தலைப்பிடுவதும் கடினமாகவேயுள்ளது. ஆனாலும் இதுவும் ஒரு பயங்கரவாத நாடகம் என்பதில் எவருக்கும் எவ்வித ஐய்யப்பாடுமில்லை.
இந்நாடகத்தில் குறிவைக்கபட்டிருப்பது இலங்கை வாழ் முஸ்லீம்களும்; இஸ்லாமும் ஆகும். இலங்கையில் இஸ்லாமும் முஸ்லீம்களும் ஆதி மனிதன் துவக்கத்திலிருந்து தொடபு பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. இருப்பினும் பண்நெடும் காலம் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்பது மறைக்க முடியாத வரலாற்று நிதர்சன உண்மையும் கூட. மேலும் இலங்கையில் முஸ்லிம்களும் பிரஜாவுரிமை பெற்றிருப்பது இலங்கை முஸ்லீம்களினதும் தாயகம் என்பதனை வெளிப்படுத்துகின்றது. இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தில் அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்வுரிமைகளை கேள்விக்குறியாக்கக் கூடியவர்களே இந் நாடகத்தின் பயங்கரவாதிகள் ஆகும். ஒரு போதும் பயங்கரவாதிகள் உருவாகுவதில்லை; மாற்றமாக அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள்.
அவ்வகையில் இலங்கை அரச மற்றும் பாதுகாப்புத் துறையில் செல்வாக்குடையவர்களின் அனுசரணையுடனே இந் நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்பதனை பச்சிளம் பாலகனும் அறியும் உண்மையுமாகும். எத்துனை காலம்தான் இவ்வுண்மைகளை பூட்டி வைப்பது. நாடகத்தில் தீவிரவாதிகளாக காவி அணிந்த அரச பல சேனாக்களும்; அரசியல் சாயம் பூசப்பட்ட சேனாக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பல்வேறு தரப்பாலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். இக் கட்டுரையின் நோக்கமும் முஸ்லிம்களின் தடுமாற்றமும்; அதனை குறைப்பதற்காக கைக் கொள்ள வேண்டிய சில வழி முறைகளை விபரிப்பதுமேயாகும்.
நாடகத்தில் சில நாடகக்காரர்கள்...
இலங்கையில் தொடரும் பயங்கரவாதத்தில் நாங்களும் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தலைமைகள் தான் என பீற்றக்கூடிய துப்பற்றவர்கள். இவர்களுள் சில குறு நில அரசர்களும் உள்ளனர். அவர்களுக்கு இந் நாடகத்தில் இலாபம் குறைவாக உள்ளதால் இவர்கள் செத்த பினங்களின் வேடத்தில் அறிமுகமானவர்கள்.
இன்னும் சில நயவஞ்சக நாடகக்காரர்கள். இவர்கள் சமுகத்தால் வளர்க்கப்பட்டதோ அல்லது சமுகத்தை வைத்து வளர்ந்து விட்ட புல்லருவிகள். இன்னும் சிலர் தங்களின் நிலையே கேள்விகுறியான நிலையில் நடிகர் வேடம் பூன எத்தனிப்பவர்கள். தங்களின் மார்க்கத்தை அடகு வைத்து சமுகத்தின் வாழ்வுக்காக(?) காவிகளிடம் பாதுகாப்பு பிச்சை கேட்கக்கூடிய தறுதலைகளுமுள்ளனர். இன்னும் சிலரோ நாட்டின் சர்வாதிகாரீகளின் கொடுக்குப்பிடிக்குள் மாட்டிக் கொண்டவர்கள். இவர்களால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நாடகத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் நாடகக்காரர்கள். நாடகத்தின் மற்றுமொரு நாடகக்காரர்கள் அடுத்து...
நாங்கள் சமூகத்தை வழி நடத்தக்கூடிய இலங்கை முஸ்லிம்களின் மார்க்க அறிஞர்களின் சபை என பீற்றக்கூடிய புரோகிதர்கள். சமுகம் எங்களுக்குக் கீழ் ஒன்றுபடுவதன் மூலமே சமுகத்தின் விமோசனம் உண்டு என பழைய பல்லவி பாடியவர்கள்; இல்லை நாட்டில் ஒன்பது அமைப்பு போதாது பத்தாவது ஒரு அமைப்பு அதில் நாம் எல்லோரும் ஒன்று கூடி ஒரு மஷூராவுக்கு வருவோம் என புது பல்லவி பாடும் நாடகக்காரர்கள். இவ்விரு நாடகக்காரர்களின் பாத்திரங்கள் ஒன்றாயினும் பெயர்கள் விசித்திரமானவை.
இவர்களின் நிலை இஸ்லாம் எனும் விளை நிலத்தில் விதக்கப்பட்ட முஸ்லிம்களை காளான்கள் தாக்க வரும் போதெல்லாம் தூரத்தில் நடப்பட்டுள்ள பயிர்கள் நுனியில் நடப்பட்டுள்ள பயிர்களை தாக்கும்போது காளான்கள் சிறு கூட்டம்தான் தாக்குகிறது; ஏனைய காளான்களைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை என வேதாந்தம் பேசித்திரிவதுடன்; பயிர்களுக்கு பசளை இட்டால் போதும் பயிர்கள் செழித்து விடும் என பகல் கனவில் தத்தளித்து அன்று சிறு காலன்களுக்கு களைநாசினி அடிக்கத் தவறியதால் இன்று காளான்கள் பெருகி விளை நிலத்தை அறுவடை செய்யும் தருனமோ என நிலைமை மாறிவிட்டது.
இவர்கள் ஷிர்க் வைக்கும் முஷ்ரிக்குகளையும் பித் அத் வாதிகளையும் சமுகத்தை காட்டிக் கொடுப்பவர்களையும் கூட்டிக் கொடுப்பவர்களையும் கூட்டிணைந்து கண்ட பலன் ஒன்றும் இல்லை. இவர்களின் பணியோ(?) மாதமொருமுறை பிறை சர்ச்சையை தோற்றுவிப்பதும் கிரிக்கெட் சூதாட்டத்திட்கொரு அறிக்கையும் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை கோழைகளாக்குவதட்கு இஸ்லாத்திற்கு புறம்பான தன்னிலை அறிக்கை சமர்ப்பித்து பயங்கரவாதிகளின் தலைமைகளை திருப்திப்படுத்துவதிலையே இவர்களது காலம் வீனடைந்து விட்டது. தேவையேற்படின் நாங்கள் கொண்ட கொள்கையும் தடயம் தெரியாமல் அழிப்பதற்கும் தயங்கமாட்டார்கள் என்பது காணமல் போன ஐவேளை அச்ச நிலை குனூத் ஒரு எடுத்துக் காட்டு.
மேலும் இப்புரோகிதர்களை விமர்சிக்க பேனாக்கள் முனைந்தால் உடனே உலமாக்களை விமர்சிக்கலாமா? என்றொரு கேள்வியுடன் கொந்தளிப்பார்கள். இவர்கள் சமூகப் பிரதிநிதிகள் அல்ல; தங்களினதும் தங்கள் இயக்கத்தினதும் ஊடகப் பிரதிநிதிகள். ஏனெனில் பயங்கரவாதம் அல்லாஹ்வின் மீதும் அவன் வழங்கிய மார்க்கத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் போர்க்கொடி தூக்கிய போதெல்லாம் தலைகாட்டாதவர்கள் தங்களையும் தங்களுடன் சார்ந்திருப்பவர்களையும் தங்களது இயக்கத்தையும் பயங்கரவாத முத்திரை குத்த முனையும் போதெல்லாம் பொறுமை காக்காமல் உடனே கொதித்தெழுந்த ஊடக அறிக்கை வெளியிட தவறவில்லை.
இத்தகையவர்கள் தானா எமக்கு வழி காட்டி விமோசனத்தை பெற்றுத்தரக்கூடியவர்கள். எம்மை நாம் மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் ஒரு போதும் எமது நிலைமைகளை மாற்ற மாட்டான் சிந்திக்க மாட்டீர்களா ?
இப் பயங்கரவாத நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வாருங்கள். இதுவும் ஒரு ஜிஹாத் என்பதனை மறவாதீர்கள். அதற்கு சில வழி முறைகள்.
1. அல்லாஹுவுக்கு எதனையும் இணையாக்காது; இணையாளர்களுடன் கூட்டுச் சேராது தனித்து நின்று அல்லாஹ்வின்பால் பூரண தவக்குல் வைத்து எமது எக்காரியங்களையும் செய்திடுவோம்.
2. இலங்கை திரு நாட்டில் எச்சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை விட்டுக் கொடுக்கவோ சமரசம் செய்யவோ முயற்சிக்காமல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி நின்று எமது வாழ்கையை அமைத்து தீன் பணி புரிந்திடுவோம்.
3. எமது பிரச்சினைகளுக்கு ஆட்சித் தலைமைகளையும் படைகளின் உதவியையும் நம்பியிராது கலிமா தையிபாவின் கீழ் ஒன்றிணைந்து எமது பலத்தை நிருபிக்க வேண்டும்.
4. எமது பிரச்சினைகள் தொடர்பாக பூரண விளக்கங்களை அல்லாஹ் ஒருவனை அஞ்சிடக்கூடிய உலமாக்கள் முன் வந்து இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் உயர்ஸ்த்தானிகரங்களுக்கு கொண்டு செல்வோம்.
5. தாய் நாட்டில் எழக்கூடிய எப்பிரச்சினைகளும் நாளை உனது தாய் வீட்டையும் பாதிக்கும் என்ற உன்மைக்கேட்ப்ப முஸ்லிம் நாடுகளில் இருக்கக் கூடிய ஆற்றலும் அறிவும் உள்ள சகோதரர்கள் அங்குள்ள அரசுகளுக்கு எமது பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடுடையவர்களாவீர்கள்.
6. இவைகளுடன் நாம் தளர்ந்து விடாது அல்லாஹ் ஒருவன் மீது பூரண பொறுப்புச்சாட்டி தூய்மையான நிலையில் அவன் ஒருவனிடம் கையேந்திடுவோம். நாம் இவ்வுலகில் வாழ வந்தவர்களல்ல மறுமை வாழ்வுக்காக வாழ வந்தவர்கள். இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
உயிர் போனாலும் இஸ்லாத்துக்காக ஒன்றுபடுவோம்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் நான் பாக்கச்சர்பற்றவன்..! இக்கட்டுரை பக்கச்சார்பான ஒரு கட்டுரை போல் காட்சி அளிக்கிறது...! உங்களது போராட்டம் இஹ்லாஸ் ஓடு கூடியதென்றால் அல்லாஹ் நிச்சயமாக நம் அனைவரையும் ஒன்று படுத்துவான்..!
ReplyDeleteஉலமாக்கள், உலமாக்களை விமர்சித்து பயனில்லை அது இனவாதிகளுக்கு இன்னும் இலகுவாக இடமளிக்கும் ஆதலால் உங்களது வாதங்களை பிணக்குகளை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கதைத்து தீர்த்துக்கொள்ளுங்கள் அந்த பிரிவினையை மக்களிடம் கொண்டு வராதீர்கள்..!
நல்ல கட்டுரை,இன்னும் இதன் விரிவுகள் தொடர வேண்டும். அக்கரையூர் மில்லா சொல்வது போன்று இதில் பக்க சார்பு உண்டுதான் ஆனல் அது மிகவும் தேவையானதுதான்.
ReplyDeleteசொல்வதை தெளிவாக நேரிடையாக சொன்னால்தான் உண்மைகள் விளங்கும். இங்கு கூட, உவமான,உவமேய கடைப்பிடிப்புக்களை தவிர்த்து நேரிடையாக காரணகர்த்தாக்களை தெளிவாக போட்டு உடைத்திருக்க வேண்டும்.
சொல்ல வேண்டியதை மறைத்து விழுங்கி சொல்வதால்தான் எந்த சமுகத்திலும் எம்மதத்திலும் பிரச்சினைகள் மேலும் வளர வாய்ப்பாகிறது.
முஸ்லிம்கள் எப்போ ஒன்றுபடுகிறீர்களோ, அன்றே உங்களுக்கு இழந்ததை பெற்றுக்கொள்ள முடியும்.உங்களுக்குள் எத்தனை கூட்டம்?பிரிவு?
தகுதியற்றவர்கள் பொருப்புவாய்ந்த தலைமைத்துவத்தை ஏற்று சமுகத்தை பிழையாக கோழையாக வழினடத்துவது மிகவும் வேதனைக்குறியது.அந்த வகையில் வெளிப்படையாக சொன்னால், உங்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினரே நான் கண்டவற்றறில் உங்கள் சமுகத்தை பிழையாக வழினடத்துபவர்கள்.துரதிஸ்டவசமாக இவர்களின் பின்னால் சில அப்பாவி பாமர மக்களும் பின்னடந்து செல்கின்றனர்.
உங்கள் மத இயக்கங்களில் எது சரிஎன எனக்கு தெறியாது,இருப்பினும் ஹலால் சான்றிதல் உட்பட பல இஸ்லாமிய விடயங்களை உங்களிடமிருந்தும் விளகவைத்த மகான்களாக அ.இ.ஜ.உ.ச யே இந்த பெறுமையை பெறுவார்கள்.
நான் கூறியது தவறெனில், முஸ்லிம்களே எனக்கு எடுத்து சொல்லுங்கள்.
உண்மையை உரைத்தீர்கள் இந்த கட்டுரை தப்லிக் தொண்டர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கும். அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது இடம் பெற்றால் வாய் மூடி இருப்பார்கள். ஆனால் தப்லிக் பற்றி விமர்சித்தால் கர்ச்சிப்பார்கள் பாவம் அவர்கள்
ReplyDeleteyou have to learn lots of and dont blame acju.
ReplyDeleteyou dont have any knowlege about acju,go and sit and see with them.
no.4 cant accept.muslims countrys burning there.they dont have them unity.arabs are suffering.how can be complained our matter with them????
ReplyDeleteyou all cannot sleep if not criticizing ACJU, SLMC etc. Every one is dfoing something for the community and everything said and done cannot be exposed in the media. You may write no of pages all in vein.
ReplyDelete