எமது கட்சியை சீர்குலைக்க பசில் ராஜபக்ஷ சூழ்ச்சித் திட்டம் - முசம்மில்
கட்சியை சீர்குலைக்கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமது கட்சியின் உறுப்பினர்களை கட்சி; தாவச் செய்யும் முனைப்புக்களில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்களை பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாஙகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் கட்சி 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தாது, கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் பெசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியை பலவீனப்படுத்தும் முனைப்புக்களில் பசில் ராஜபக்ஷ ஈடுபடவில்லை என சிலர் குறிப்பிட்ட போதிலும், உண்மை அதுவல்ல என்பது எமக்கு தெளிவாகத் தெரியும் என முசாம்மில் தெரிவித்துள்ளார். சமகி பெரமுன ஆட்சிக் காலத்தில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க இடதுசாரி கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனவும், அதேபோன்ற தீய சக்திகள் தற்போதும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் நடவடிக்கைகளினால் அரசாங்கம் கவிழ நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஜே.என்.பி கட்சியை சூழ்ச்சித் திட்டங்களினால் பலவீனப்படுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்..!
ReplyDelete