மூதூரில் பெண்கள் மாத்திரம் வழங்கிய இரத்ததானம் (படங்கள்)
மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின்(Pனுகு) பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (2014-05-31) மூதூரில் பெண்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் இரண்டாவது இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
Pனுகு பெண்கள் பிரிவின் தலைவி தௌபீக் றுமானாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திருகோணமலை பொது வைத்தியசாலையினுடைய இரத்ததான பிரிவுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் உட்பட Pனுகு அமைப்பினுடைய பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏம். நசார், கல்வித்துறை பொறுப்பாளர் ஜே.எம். நிஹாஸ், பொருளாளர் எம். றிபாஸ் மற்றும் அமைப்பினுடைய முக்கியஸ்தர்களும்; பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இரத்ததானம் செய்வதற்கு ஆர்வத்தோடு கலந்து கொண்டபோதிலும் தகுதி நிலை அடிப்படையில் 78 பெண்கள் இரத்ததானம் செய்தனர். சென்ற வருடமும் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் 80 பெண்கள் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment