வத்திகானில் குர்ஆன் வாசிக்கப்படப் போகும் அதிசயம்!
உலக வரலாற்றில் முதன் முறையாக கிறித்தவர்களின் புனித இடமான வத்திகானில் புனித குர்ஆன் வரும் ஞாயிறன்று வாசிக்கப்பட உள்ளது. இஸ்லாமியர்களின் தொழுகையும் அன்றைய தினம் வத்திகானில் நடைபெறும். பாலஸ்தீன மக்களுக்கும், கிறித்தவ மக்களுக்கும் யூத மக்களுக்கும் அமைதி உண்டாக்கும் முயற்சியாக இதனை போப் முன்னெடுத்துள்ளார். போப் ஃபிரான்ஸிஸ் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸூக்கும், இஸ்ரேலிய பிரதமர் ஷிமான் ஃபெரோஸூக்கும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பானது சென்ற வாரம் போப் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்த போது கொடுக்கப்பட்டது.
அப்பாஸ், ஃபெரேஸ், ஃபிரான்ஸிஸ் என்ற மும்மதத்தவர்களும் பங்கு பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு வருங்காலத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அமைதியை கொண்டு வர ஏதுவாக இருக்கும். இந்த கூட்டு பிரார்த்தனையில் எந்த அரசியலும் இல்லை என்பதையும் போப்பின் செய்தியாளர் இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு தெரியப்படுத்தினார்.
இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வானது உலக மக்களுக்கு நேரிடையாக ஒளி பரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாகாலமாக போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள அந்த பாலஸ்தீன மக்களுக்கு இதன் மூலமாவது ஒரு விடிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம். Q
தகவல் உதவி
அல் அரபியா தினசரி
சுவனப் பிரியன்
Post a Comment