குவைத்திலிருந்து உயர்மட்ட குழு இலங்கை வருகை
குவைத்தின் பிரதி சபாநாயகர் முபாரக் அல் குரய்னிஜ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் அழைப்பின் பேரில் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் 4ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.
குவைத் பிரதிநிதிகள், நாடாளுமன்றிற்கு சென்று அதன் செயற்பாடுகளை பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட பலரை இந்தப் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர்.
இரு தரப்பு உறவுகள், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
Post a Comment