சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சில் சந்தேகமுள்ளது - சர்வதேச கிரிக்கெட் பேரவை
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு முறைமை சந்தேகத்திற்குரியது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இங்கிலாந்துடன் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர் ஆகியோர் முறையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் சசித்ர சேனாநாயக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சோதனைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றசாட்டு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு வருடங்களாக சச்சித்ர சேனாநாயக்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடி வருகின்றபோதிலும் அவர் மீது இவ்வாறான குற்றசாட்டுக்கள் எழுப்பப்படவில்லையென சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.
இருப்பினும் அடுத்த ஒருநாள் போட்டியில் சச்சித்ர சேனாநாயக்க பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு இது ஒன்றும் புதிதில்லை..! தெற்காசிய வீரர்களை சீண்டுவது..!
ReplyDelete