முஸ்லிம் காங்கிரஸுக்கு அடுத்த தேர்தலில் ஒருநிலை ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்
எந்தத் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸை எப்படி மடக்குவது என்கின்ற வியூகங்கள் பல்வேறு தரப்பினர்களினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் அந்த வியூகம் குறித்த சரியான உடன்பாடு இல்லாமல் யாரோடும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுவைத்துக் கொள்ளாது என்கின்ற விடயத்தில் முஸ்லிம் மக்கள் தெளிவான நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நடைபெற்ற அபிவிருத்தி முப்பெரும் விழாவினைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதான வீதியில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,
இன்று அரசின் சில பங்காளிக் கட்சிகள், அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறப்போவதான ஒரு படத்தினைக் காட்டிக்கொண்டிருகின்றனர். ஆனால் அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிலபேருக்கு மிக முக்கியமான அவசரமும் அவசியமாக இருப்பதால்தான் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுகின்றார்கள்.
ஆட்சித் தலைமையோடு முஸ்லிம் காங்கிரஸ் முரண்பட்டுக்கொள்வது என்பது இன்று எதிரணியில் உள்ள சில இடங்களில் எதிர்பார்புக்களை கூட்டியிருக்கலாம். ஆனால் எதிரணியும் தன்னுடைய அரசியலை இன்னும் சரியாக அமைத்துக்கொள்வதற்கு தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மிக நிதானமாகத்தான் செயற்படவேண்டியுள்ளது.
எந்தத் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் பலம் என்பது இப்போதைக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளிலும், 7 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கைகளிலும்தான் இருந்துகொண்டிருக்கின்றது. இந்த அந்தஸ்தை வீணடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய அரசு, புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்கின்ற கோசத்தோடும் அந்த ஒரே சாதனையை மிகப்பெரும் மூலதனமாக வைத்து ஆட்சியை நீடிக்கலாம் என்கின்ற ஆணவத்தோடும் அகாங்காரத்தோடும் அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது. அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தற்போது உள்நாட்டு புலிகள் அல்ல. வெளிநாடு என்கின்ற விடயம் தற்போது பேசப்படுகின்றது.
புலிகளை நாட்டிலிருந்து அழித்துவிட்டோம். இருந்தாலும் வெளியேயிருக்கின்ற புலிகளினால் நாட்டிற்கு ஆபத்து. எனவே நாட்டை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒருமுறை இந்த அரசை விட்டால் வேறுவழியில்லை என தெற்கிலே இருக்கின்ற சிங்கள மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டுகின்ற காலம் இதுவாகும்.
இந்தப் பின்னணியில்தான் இன்று சர்வதேசம் எல்லா முயற்சிகளையும் வித்தியாசமாக செய்துகொண்டிருக்கின்றது. புலிகளினால் வென்றுத் தராதவைகளை சர்வதேசம் வென்றுத்தரும் என்கின்ற அதீத நம்பிக்கையில் தமிழ் மக்கள் இன்று உள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களுடைய அழுத்தத்தின் ஊடாக ஏதாவதுதொன்றை அடைந்துகொள்ளலாம் என்கின்ற எதிர்பார்பு ஒருசிலருக்கு இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே அதிகப் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளிலே கோசம் போடுகின்ற புலம்பெயர்ந்தவர்களுடைய எல்லா விடயங்களையும் செவிசாய்க்கத் தயாராகயில்லை என்பதனை காண முடிகிறது.
இந்தச் சூழலிலேதான் அரசாங்கம் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்கின்ற விடயத்தில் நாட்டத்தோடு செயற்பட்டு வருகின்றது. எதிர்க் கட்சிகள் சிந்திக்கின்ற மாதிரி அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உள்ள தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக ஒரு தனி மனிதரை அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதற்கு எல்லாக்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸை, அரசாங்கம் நினைத்த மாதிரி கையாளலாம் என நினைத்தால் அது மிகப்பெரும் தவறாகும். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை சுமர்ந்திருக்கின்ற கட்சியாகும். ஆனால் உயர்வுகளோடு அள்ளுப்பட்டுப்போய் அபத்தமான முடிவுகளை எடுக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் மிக உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருப்பதோடு எதையும் நிதானம் இழந்து முடிவெடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸுக்கு அடுத்த தேர்தலில் ஒருநிலை ஏற்படலாம். ஆனால் எது நடந்தாலும் மாகாண சமன்பாட்டில் காங்கிரஸினுடைய பேரம்பேசும் சக்தி என்பது சென்ற தடவை தனித்து போட்டியிட்டதன் காரணமாக காப்பாற்றப்பட்டது.
சம்மாந்துறை மண், தலைவர் அஷ்ரப் பிறந்த மண்ணாகும். தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொண்ட மண். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த முறை இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வருகின்றபோது சம்மாந்துறையின் ஆசனத்தை உறுதிப்படத்திவிட்டுதான் ஏனைய ஆசனங்களை தீர்மானிப்பேன்.
எனவே, அடுத்த அரசியல் முடிவு என்பது இந்த சமூகத்தை இன்னும் சிக்கலுக்குள் மாட்டிவிடும் முடிவாக இல்லாமல் தீர்வுகளை பெற்றுத்தரும் முடிவாக இருத்தல் வேண்டும். அதற்கான வியூகங்களை நாங்கள் வகுக்க வேண்டும் என ஹக்கீம் மேலும் கூறினார்.
அசசுடன் சேர்ந்து இவர் சாதித்தது என்ன என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
ReplyDeleteநாம் இவரை சேரச்சொல்லவும் இல்லை பிரியச்சொல்லவும் இல்லை, இவர வந்து குடத்துக்க கு.. விடுவதுமாதிரி தேர்தல் காலங்களில் மட்டும் வந்து அரசிற்கெதிரான அவரது சண்டித்தனத்தையும், இனவாதத்தையும் கக்கிவிட்டுப்போவார்..! தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்தை கட்டிப்பிடித்துக்கொள்வார்..!
ReplyDeleteஇவர் பர்மாவில் நடந்த அழிவு போல் இலங்கையில் நடக்கும்வரை ஒரு .... புடுங்க மாட்டார்.. ! அவ்வாறு நிலைமை வரும் போது குடும்பத்தோடு வெளிநாடுகளில் சென்று தஞ்சம் புகுந்து கொள்வார்..!
இது இவரை பொன்ற அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் செய்வர்..!
நம்ம தலைவர் பேசிய இடம் சம்மாந்துறை என்பதை மாத்திரம் தெழிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteஅடுத்த தேர்தல் வருகிறது டும் டும்,
ReplyDelete