Header Ads



பேஸ்புக், டுவிட்டரில் நுழைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, தற்போது பேஸ்புக், டுவிட்டரில் நுழைந்துள்ளது. உலகம் முழுவதும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளும் இதன் மூலம் மக்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தற்போது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைந்துள்ளது. இந்த இரண்டு சமூக இணையதளங்களிலும் சிஐஏ நேற்று தனது கணக்கை தொடங்கியது.

டுவிட்டரில் சிஐஏ தனது பக்கத்தில், ‘இதுதான் எங்களின் முதல் செய்தி என்று உறுதிப்படுத்த முடியாது, அதே சமயம் இது எங்களின் முதல் செய்தி அல்ல என மறுக்கவும் மாட்டோம்’ என்று கிண்டலான முதல் குறிப்புடன் துவக்கியது. சமூக வலைதளங்களில் இணைந்தது குறித்து சிஐஏ இயக்குனர் ஜான் பிரன்னன் கூறுகையில், ‘பொது மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும், சிஐஏ பணிகள், வரலாறுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தகவல்களை பரிமாறவும் இது உதவும்’ என்றார்.பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் சிஐஏ மியூசியம் குறித்த தகவல்கள், படங்கள் மற்றும் செய்திகளை சிஐஏ வெளியிடும் என தெரிகிறது. ஏற்கனவே யூடியூப் மற்றும் பிளிக்ஆரில் சிஐஏ கணக்கு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.