Header Ads



கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அதாவுல்லாவுக்கு மாத்திரமே உள்ளது - கல்விப் பணிப்பாளர் நிஸாம்

(சஹாப்தீன்)

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த பொறுப்பை அவர் தட்டிக் கழிக்க கூடாது. அவர் இதனை ஏற்கும் போது, நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கல் வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் (31.05.2014) நடைபெற்ற நேசவினை நாவல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தொடர்ந்து பேசுகையில்,

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அமைச்சர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இதனை ஒரு கல்விப் பணிப்பாளராக கூறவில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே தெரிவிக்கின்றேன். என்ற போதிலும், இந்தப் பொறுப்பை அவர் தட்டிக் கழித்துக் கொண்டு வருகின்றார்.

இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு போன்றன கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர் அதாவுல்லா ஆக்ரோசமாக அவற்றை சுட்டிக் காட்டி தீர்வனை பெற்றுக் கொள்வதனை நாம் நேரடியாக் கண்டுள்ளோம்.

முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி இருந்த நிலைமாறி, இன்று பல கட்சிகள் எம்மடையே உள்ளன. நமது ஒற்றுமை இவ்வாறு சிதைக்கப்பட்டதனால்தான் நாம் பலவீனப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கு ஒரு நிர்வாகம் இருக்கின்றதேயன்றி, அதனை முழுமையாக நன்மையடைந்து விட முடியாதுள்ளது. 

ஆதலால், இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு, எம்மிடையே உள்ள கட்சிகள் யாவும் ஒற்றுமைப்படல் வேணடும். ஆதன் பின்னர் பொருத்தமானவரை தலைவராகக் தேர்வு செய்து வேண்டும். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு யார் தலைமை தாங்குவதற்கு தகுதியானவர் என்று பார்த்து அவரை அதற்கு நியமிக்க வேண்டும்.

இன்று வெளியிடப்பட்ட நேசவினை எனும் நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சாகித்திய பரிசு பெறும் தகுதியையும் அது கொண்டுள்ளது. இது போன்ற நாவல்களை எழுத்தாளர் ஹிதாயத்துல்லா மீர்சா எழுத வேண்டும்.

11 comments:

  1. முஸ்லிம்களின் பள்ளிகள் உடைக்கப்பட்ட போது எந்த வார்த்தைகளையும் இதுவரை கொட்டாதவரும் இவர் ஒருவரே என்ற பெருமையையும் இவருக்கே சாரும்.

    பள்ளிகள் விவகாரத்தில் அவர் வாய் திரக்க வேண்டுமென்றால், அவர் இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் ஏதும் பள்ளிகள் உடைக்கபட்டால்தான் அவர் வாய் திறப்பார் என அவரே சொல்லியிருக்கின்றார். முஸ்லிம்களுக்குள் இப்படியும் பிளவுகளா?

    ReplyDelete
  2. எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள்......!!!! இவர்களுக்குள் தலைமைத்துவப் போட்டி....???? அல்லாஹ்தான் இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. நிஸாம் sir, நீங்கள் சொல்லுவதை ஏற்ருக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், தே. கா இன் தேசியத்தலைவரை மாகணத்துக்குள் மட்டும் முடக்க நினைக்கிறீர்களோ என எண்ணத்தோன்றுகின்றது...!
    அவர் அனைத்து சமூகத்தின் சேவகன், எங்கள் சமூகத்தின் காவலன் என நினைத்திருக்கின்றோம் அவரின் பொறுப்புகளை குறைக்க நினைக்காதீர் என நான் உங்களை வினையமாக வெண்டிக்கொள்கிறேன்.

    மேலும் உங்களைப்போன்று படித்தவர்கள் துதிபாடும் நடவடிக்கையை விடுத்து சமகால பிரச்சினைக்கான தீர்வுகளையோ ? அல்லது தீர்க்கும் வளி முறையையோ? பகிரங்கமாக வழங்கும் அல்லது கேட்கும் வாய்ப்பினை பயன் படுத்தி இருக்கலாம்..!

    ReplyDelete
  4. man kutirayai nambi artil irankina seelam than

    ReplyDelete
  5. அவர் மேடைகளில் பாட்டுப்பாடுகின்றார் அது அவர் சொந்த விடயம், அதே வேளை அவர் பரவலாக உதவிகள் செய்துள்ளார், அரசாங்கத்துடன் இணைந்து பல சேவைகளை செய்கின்றார்,

    ReplyDelete
  6. எம்.ரி.எ.நிஸாம் நல்லாவே முகஸ்துதி பாடி இருக்கிறார்.

    ReplyDelete
  7. கோடை வெய்யில் ரொம்ப அதிகமாக அடிகின்றதே அதனால் இவர் அப்படித்தான் பேசுவார்.

    ReplyDelete
  8. Mohan Kokila,

    பள்ளிவாயல்கள் விடயத்தில் வெளிப்படையாகவும் முஸ்லிம்கள் திருப்திப்படுமளவிற்கும் யார்தான் பேசி இருக்கின்றார்?

    அத்தோடு முஸ்லிம்களுக்குள் நிறையவே பிளவுகள் உள்ளன இதை வாயில் விரல் வைத்து பெரிதாக ஆச்சரியப்படுமளவிற்கு இல்லை. இனியும் பிளவுகள் வேண்டாம் என்பதே எமது தற்போதைய நிலை. நீங்கள் யாரோ தெரியவில்லை முஸ்லிம்கள் மீது இவ்வளவு கரிசனை காட்டு கின்றீர்கள் அதற்கு மிகவும் நன்றி, அதேவேளை உமது பின்னூட்டத்தின் உள் அர்த்தத்தை கொண்டு இன்னும் பிளவுகள் ஏற்பாடாகிவிடும் போலுள்ளதே.....

    ReplyDelete
  9. My meaningful adivice to EP Education Dirctor ,Nizam, give due respect to the position you hold, you must set an example while holding such a high position, be free from politics, be impartial and maintain intergrity and ethics. Based on these principals you must save community.

    ReplyDelete
  10. பாட்டுப் பாடி ட்தூங்க வைக்கத்தானே.....................தகுதி...........

    ReplyDelete

Powered by Blogger.