மலர்ந்தது பலஸ்தீன ஐக்கிய அரசு - ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குண்டுவீசி வெறியாட்டம்
காசா மற்றும் மேற்குக்கரைக்கு இடையிலான பல ஆண்டுகால பிளவை முடிவுக்கு கொண்டு வரும் பலஸ்தீனின் புதிய ஐக்கிய அரசு ரமல்லாஹ் நகரில் நேற்று பதவியேற்றது.
இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத் தாஹ் கட்சிக்கு இடையில் ஏற்பட்ட சமரச உடன் படிக்கைக்கு அமைய உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அரசில் துறைசார் நிபுணர்கள் உள்ளடக்கப்பட் டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வெற்றியீட்டியதை அடுத்து இரு தரப்பும் பலஸ்தீனில் பிரிந்து நின்றே ஆட்சி நடத்தி வரு கின்றன. இதில் கடந்த 2007 ஆம் ஆண்டு பத் தாஹ்வை காசாவிலிருந்து வெளியேற்றிய ஹமாஸ் அங்கு தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.
எனினும் ஹமாஸ் ஆதரவுடனான பலஸ்தீன அரசுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள் ளப்போவதில்லை என்று இஸ்ரேல் எச்சரித்துள் ளது. இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்காத ஹமாஸ் அதனை அழிப்பதற்கு உறுதிபு+ண்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ{டனான சமரச உடன்;படிக்கை எட்டப்பட்டதைத் தொடர்ந்து பலஸ்தீன நிர்வாகத் துடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் கடந்த ஏப்ரலில் ரத்துச் செய்தது.
ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் மற்றும் மேற் குலக நாடுகள் தீவிரவாத குழுவாக அறிவித்துள் ளன. அந்த அமைப்பும் இஸ்ரேலுடனான அமை திப் பேச்சுவார்த்தையை நிராகரித்து வருகி றது. எனினும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஐக் கிய அரசு முந்தைய உடன்படிக்கைகளை மதித்து நடக்கும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உறுதி அளித்துள்ளார்.
எனினும் ஐக்கிய அரசு அமைப்பதில் கடைசி நேரத்தில் ஹமாஸ்-பத்தாஹ்வுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட சூழலிலேயே நேற்று அது தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அப்பாஸ் முன்னிலையில் புதிய அரசு பதவிப் பிரமாணம் செய்துகொண்டது.
புதிய அரசில் இடம்பிடித்திருக்கும் அமைச் சர்கள் அரசியல் சார்பற்றவர்கள் என்று அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார். ரமல்லாஹ் நகரில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வு தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
எனினும் புதிய ஐக்கிய அரசில் ஹமாஸ் ஆளுகையில் இருக்கும் காசாவைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டிருந்த போதும் அவர்கள் மேற்குக்கரைக்கு வர இஸ்ரேல் அனுமதி மறுத்ததால் பதப்பிரமாண வைபவத்தில் பங்கேற்கவில்லை.
இதில் 17 பேர் கொண்ட அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பவர்கள் அரசியல் சார்பற்றவர்கள் என்றும் அமைதியைத் தொடர முயற்சிப்பார்கள் என்றும் அப்பாஸ் குறிப்பிட்டார். "இன்று ஐக்கிய அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் எமது இலக்கை எட்ட பெரும் தடங்கலாக இருந்த பிளவு முடிவுக்கு வருகிறது என்று பிரகடனம் செய்கிறேன்" என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.
முன்னதாக ஐக்கிய அரசில் பலஸ்தீன கைதிக ளுக்கான அமைச்சர் நியமிக்கப்படாதது குறித்து ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தொரிவித்ததோடு புதிய அரசையும் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந் தது. எனினும் அந்த அமைச்சு பொறுப்பு பிரதமர் ரமி அல் ஹம்தல்லாஹ்விடம் வழங்கப்பட்டிருப் பதை ஹமாஸ் அங்கீகரிப்பதாக அந்த அமைப் பின் அதிகாரி சவாஹ் அல் பர்தவீல் பின்னர் குறிப்பட்டார். "ஹமாஸ்-பத்தாஹ்வுக்கு இடையி லான முரண்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தாக" அவர் தெரிவித்தார்.
கைதிகளுக்கான அமைச்சானது இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் தொடர் பில் செயற்பட உருவாக்கப்பட்டதாகும். இந்த கைதிகளை சுதந்திரப் போராளிகளாக பலஸ்தீனம் பார்க்கின்றபோதும் இஸ்ரேல் இவர்களை குற்ற வாளிகளாகவே கருதுகிறது.
"ஆயிரம் தடவை கூறினாலும் எம்மால் ஏற்க முடியாது. தமது வாழ்நாளின் பெரும்பங்கை இறைவனுக்காக (சிறையில்) கழிக்கும் அவர் களை எவ்வாறு நாம் கைவிட முடியும்?" என்று ஹமாஸ் உள்துறை அமைச்சர் பாதி ஹம்மாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் மேற்குலகின் நிதியை தொடர்ந்தும் பெறும் நோக்கிலேயே கைதிகளுக்கான அமைச்சை தவிர்க்க மஹ்மூத் அப்பாஸ் முயன்றதாக பலஸ்தீன அதிகாரி ஒரு வர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீனர்களுக்கு உதவி அளித்தால் பலஸ்தீன நிர்வாகத்திற்காக நிதி உதவிகளை நிறுத்துவதாக ஏற்கனவே சர்வதேச நன்கொடை யாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீனர்களின் குடும்பங்களுக்கு பலஸ்தீன அரசு மாதந்தம் உதவித் தொகை வழங்கி வருகிறது. இது இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஊக்குவிப்பதாக அமையும் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது.
ஏற்படுத்தப்பட்டிருக்கும் பலஸ்தீன ஐக்கிய அரசு 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.
எனினும் புதிய அரசை அங்கீகரிக்க சர்வதேச நாடுகள் அவசரம் காட்டக் கூடாது என்று இஸ்ரேல் ஜனாதிபதி பென்ஜமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்டார். ~~இஸ்ரேலை அழிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் முயற்சிக் கின்றனர். சர்வதேச சமூகம் அதனை ஏற்கக்கூடாது. இது அமைதியை ஏற்படுத்தாது. தீவிரவாதத்தை வலுப்படுத்துகின்றது" என்று நெதன்யாகு இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டார்.
இந்த அரசு உருவாக்கப்பட்டால் இஸ்ரேல் பலஸ்தீனத்துடனான பாதுகாப்பு தவிர்த்து அனைத்து ஒத்துழைப்பையும் நிறுத்திக்கொள்வதாக நெதன்யாகு எச்சரித்திருந்தார். எனினும் நெதன்யாகுவின் அறிவிப்புக்கு கண்டனம் வெளியிட்ட ஐக்கிய அரசின் பிரதமர் ஹம்தல்லாஹ் "இஸ்ரேல் அனைத்து வகையிலும் தனது ஆக்கிரமிப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
வெற்றி அளிக்காத இஸ்ரேல் - பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்கா புதிய ஐக்கிய அரசில் ஹமாஸின் பங்கு குறித்து கவலை வெளியிட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் - பத்தாஹ்வுக்கு இடையில் ஐக்கிய அரசு அமைக்கப்பட்டபோது பலஸ்தீனத்திற்கான மில்லியன் டொலர் நிதியை மேற்குலக நாடுகள் இரத்து செய்தன. பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அரசு ஜனாதிபதி அப்பாஸை நிராகரித்ததோடு பத்தாஹ் அமைப்பை காசாவில் இருந்து வெளியேற்றியது.
இரு தரப்புக்கும் இடையிலான பிளவை முடிவுக்கு கொண்டுவர கடந்த காலங்களில் பல முறை சமரச பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் இஸ்ரேலின் ஒடுக்கு முறைகள் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட முக்கிய காரணியாக இருந்ததாக கருதப்படுகிறது.
பலஸ்தீனர்கள் பல தினங்களுக்கு முன்னர் நடத்திய ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக
இஸ்ரேல் யுத்த விமானங்கள் நேற்று திங்கட்கிழமை காசா மீது தாக்குதல் நடத்தின.
இஸ்ரேல் ஐக்கிய அரசு ரமல்லாஹ்வில் பொறுப்பேற்க ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னரே
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
"காசாவின் மத்திய மற்றும் தென்பகுதியில் இருக்கும் தீவிரவாத தளங்கள்
இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது" என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர்
குறிப்பிட்டார். "இலக்கு நேரடியாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றும்
அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலதிகமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Post a Comment