Header Ads



வருவாரா..?

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அரசியலில் குதிக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் ஒன்றை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சிறிலங்கா அதிபரின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி, அவர் அரசியலில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர், கொழும்பு மாவட்டத்தில் கோட்டே தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது சிறிலங்கா அதிபர் வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு அவரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், வேறு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்தால், தாம் அரசியலில் நுழையத் தயார் என்றும், ஏனைய ராஜபக்சக்களைப் போன்று தாம் அம்பாந்தோட்டையில் இருந்து அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கொழும்பிலிருந்தே அரசியலில் பிரவேசிப்பேன் என்றும் கோத்தாபய ராஜபக்ச கடந்த வாரம் தேசய என்று சிங்கள வாரஇதழுக்கு கடந்தவாரம் செவ்வி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Appa ivvalavu kalamum avar arasiyal nadaththavillaya

    ReplyDelete

Powered by Blogger.