பக்தாத் நோக்கி சதாம் ஆதரவுப் படைகள் - ஈராக்கில் உச்சகட்டப் போர்..!
(நஜீப் பின் கபூர்)
நாகரிகத்தை உலகிற்குக் கற்றுக் கொடுத்த நாடுகள் வரிசையில் ஈராக் முக்கியமான நாடக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. சதாம் ஹூசைன் அண்மைக் காலத்தில் ஈராக்கை நெடுநாள் ஆட்சி செய்த முக்கிய தலைவர். உலகத்தாருக்கு நன்கு பரிச்சிதமானவர். ஆனால் அமெரிக்காவுக்கு ஒரு காலத்தில் எதிரியாகவும் மற்றுமொரு காலத்தில் நண்பனாகவும் கடைசியில் அமெரிக்க சார்பு குவைத் மீது படையெடுத்து அமெரிக்காவை பகைத்துக் கொண்டார் சதாம் ஹூசைன். மனிதன் பயங்கரமான இரசாயண ஆயுதங்களை இருப்பில் வைத்திருக்கின்றான் என்ற குற்றச்சாட்டில் சதாம் ஹூசைனுக்கு எதிரான போரை அமெரிக்கா துவங்கியது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு முன்னே தாக்குப் பிடிக்க முடியாது மனிதன் எலியைப் போல் பொந்துக்குல் பதுங்கி நிற்க அமெரிக்காப் படைகள் சதாம் ஹூசைனை வெளியே இழுத்து வீதிகளில் எடுத்தச் சென்ற காட்சிகள், அந்த நேரத்தில் டீப் டொப் மனிதன் சன்னியாசிபோல் நின்ற காட்சிகள் ஈராக் மக்கள் மனதில் மட்டுமல்ல மற்றவர்களின் நினைவிலும் நிலைத்து நிற்க்கின்றது. லிபியாவை நெடுநாள் ஆட்சி செய்த கடாபிக்கு நடந்த கதையும் ஏறக்குறைய இதே பணியில்தான் அமைந்திருந்தது.
சதாமுக்குத் தண்டணையை அமெரிக்காவின் கையாட்கள் நீமன்றத்தின் ஊடகக் கொடுக்க, கடாபிக்கான தண்டணையை கிளர்சியாளர்கள் வீதியில் வைத்தே கொடுத்து விட்டனர். என்னைக் கொல்லாதே... கொல்லாதே... என்று கடாபி கதறியும் துப்பாகிதாரிகள் அவரின் உடல் மீது தோட்டக்களை ஏவிவிட்டனர்.
சதாம் ஹூசைன் கோலையாக பொந்தில் பதுங்கி மட்டிக் கொண்டாலும் தூக்கு மேடையில் வீரனாக நின்று சாவை ஏற்றுக் கொண்டவர் என்ற வகையில் அந்தக் காட்சிகளும் மக்கள் மனதில் நன்றாகவே இன்று வரை பதிந்து இருக்கின்றது. சதாம் மரணத்திற்குப் பின்னர் அவருடைய ஆதரவாலர்கள் அடங்கிப் போயிருந்தார்கள். தனது தலைவன் தூக்கு மேடை ஏற்றப்பட்ட நாட்களில் கூட ஈராக்கில் எந்தவிதமான வன்முறைகளும் நிகழ வில்லை எனவே சதாம் ஹூசைன் அபிமானிகளுக்கு என்ன நடந்தது என்பது அன்று பெரும் கேள்விக் குறியாகவே உலகத்தவர்களினால் பேசப்பட்டது - பார்க்கப்பட்டது.
இரசாயண ஆயுதங்களை பெரும் தொகையில் குவித்துக் கொண்டு உலகிற்கு அச்சுறுதத்லாக நிற்கின்றான் என்ற போலிக் குற்றச் சாட்டுகளைச் சுமத்தி சதாம் ஹூசைன் தூக்கு மோடைக்கு ஏற்றப்பட்டு 9 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று சதாம் ஆதரவுப் படைகள் மின்னல் வேகத்தில் ஈராக்கின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது என்ற தகவல் எமக்குக் கிடத்தக் கொண்டிருக்கின்றது. அது பற்றிய தகவல்களை நமது வாசர்களுக்கு இப்போது சொல்லி வைப்போம்.
இந்தத் தகவல்களை அறிவதற்கு முன்னர் ஈராக்கின் அரசியல் பின்னணி மற்றும் சமூக அமைப்புத் தொடர்பாக சுருக்கமாகத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. சீயாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுன்னி முஸ்லிம்கள் சிறுபான்மையினர். ஆனால் சுன்னி இனத்தைச் சேர்ந்த சதாம் ஹூசைன் நெடுங் காலமாக ஈராக்கின் தலைமைப் பதவியில் இருந்து வந்தார். இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் சுன்னி இனத்தைச் சேர்ந்தவர்களே பெரும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக இராணுவத்தில் பெரும் பதவிகளை அவர்கள் வகித்துக் கொண்டிருந்தனர்.
அமெரிக்காப் படைகள் ஈராக்கிற்குள் புகுந்து சதாம் ஹூசைனை பதவி கவிழ்த்ததைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனநாயக முறையில் அமைந்த தேர்தல்களில் சீயா பெரும்பான்மை முஸ்லிம்களே ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். எனவே சதாம் பதவி கவிழ்க்கப்பட்டு அதிகாரத்தை பெரும்பான்மை சீயாக்கள் கைப்பற்றிக் கொண்ட விடயத்தில் இது நாள்வரை அதிகாரத்தில் இருந்த சுன்னிக்கள் மத்தியில் nரும் அதிர்ப்பதி நிலை இருந்து வந்நது. அத்துடன் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அமெரிக்காவின் ஆதிக்கம் ஈராக்கில் இருந்த போது சீயாக்களுக்கும் சுன்னிக்களுக்கமிடையே பாரிய விரிசல்களை அங்கு ஏற்படுத்தி வந்தது. இதற்கு அமெரிக்காவின் நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைத்தக் கொண்டிருந்து. என்பது குறிப்பிடத் தக்கது.

சுன்னி இனத்தைச் சேர்ந்தவர்களே தற்போது ஈராக்கில் கிளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றவர்கள். இந்தளவு பாரிய அமைப்பாக அவர்கள் எழுந்து நிற்பதற்கு மொசாட்டும் சிஐஏயும் பார்த்த Nலையினால்தான் காரணம். ஒருவரினதும் கண்ணில் படாதவாறு இந்தளவு பலம் பெற்ற சக்தியாக அல்ஹைடாவின் துணையுடன் சதாம் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இராணுரீதியில் பலம் பெற இதுவே முக்கிய காரணம்.
சதாம் தூக்கிலிடப் பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான சுன்னி சதாம் ஆதரவாலர்கள் அல்ஹைடாவுடன் இணைந்து கொண்டனர். 2010 ஈராக் அல்ஹைடா அமைப்பிற்கு அல் பக்கர் அல் பஹாதி என்பவர் தலைவரானார். ஈராக்;, சிரியா இணைந்த இஸ்லாமிய கூட்டாச்சிக்கான அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்கள் பற்றி இன்று உலகம் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றது.
இந்த அமைப்பிற்கு பின்னால் ஏன் மொசாட் நிற்கின்றது என்றால் சதாம் ஹூசைனுக்குப் பின்னால் ஈராக்கில் சீயாக்கள் பலம் பெற்றதுடன், ஈராக்கிய ஆட்சியாளர்கள் சீயாக்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஈரானுடன் மிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஏற்கெனவே மத்திய கிழக்கில் பலம் பெற்றுள்ள ஈரானுடன் ஈராக் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதால் அது பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக் குறியாக்கிவிடும்.
ஈரானைத் தண்டிக்க முதலில் சீயாக்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற சிரியா, ஈராக் என்பவற்றின் ஆட்சி மாற்றம் முதலில் இஸ்ரேலுக்கு அவசியமானது என்ற நியதிதே மொசாட் பின்னணிக்குக் காரணம். ஏற்கெனவே ஈரானுக்கு அஞ்சிய சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் இரகசிய இராணுவ உடன்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்ற என்ற தகவல்கள் அண்மையில் அம்பலத்திற்கு வந்தது.
ஈராக்கில் சுன்னிகள் சார்பான அரசொன்று தோற்றம் பெருவது இஸ்ரவேலுக்கும் மேற் சொன்ன சுன்னிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளுக்கும் பெரும் பாதுகாப்பு என்ற காரணத்தால் கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையான பணமும் ஆயுதங்களும் மேற் சொன்ன நாடுகளில் இருந்து தராளமாகக் கிடைத்து வருகின்றது. இதனால்தான் இவர்கள் கடுகதியில் ஈhரக் நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு வருகின்றார்கள். இந்த அமைப்பினர் ஏற்கெனவே சிரியாவின் சில பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுதான் இந்நத் தாக்குதல்களைத் தொடுத்திருக்கின்றார்கள். சிரியாவில் சில பகுதிகளையும் ஈராக்கையும் இணைத்து இஸ்லாமிய ஈரான் விரோத அரசொன்றை நிறுவுவதுதான் இவர்களின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.
2011ல் அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறிய பின்னர் இவர்கள் மெது மெதுவாகத் தமது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். கடந்த ஜனவாரி மாதம் ஈராக் பலூஜா நகரை அரச படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து இவர்கள் முதலில் விடுவித்துக் கொண்டனர். கடந்த ஒரு வாரத்துக்குள் மொசூல், திக்ரீத், நினிவே, சலாஹூத்தீன், கீர்குக் ஆகிய நகரங்களைக் இவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
தற்போது ஈராக் தலை நகர் பக்தாதில் இருந்து 90 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள துலுய்யா நகரை வியாழக்கிமை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தற்போது உலக சீயாக்களின் புனித நகராகவுள்ள கர்பலாவை நோக்கி இவர்கள் விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்த வண்ணமிருக்கின்றன. சம நேரத்தில் ஈராக்கின் தலை நகர் பக்தாதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுதான் இவர்களின் பிரதான நோக்கம். அல்ஹைடா இவ்வாறு நகரங்களைக் கைப்பற்றி வருகின்ற போது இராணுவம் தாமகவே பின்வாங்கி வருவது ஆட்சியாளர்களுக்குப் பெரும் தலையிடியாக இருந்து வருகின்றது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப் பாட்டில் பெரும் எண்ணிக்கையான போர் விமானங்களும் மற்றும் ஹலிக்கப்டர்களும் சிக்கி இருப்பதால் அவர்களின் நடவடிக்கை மேலும் தீவிரமைடைந்திருக்கின்றது. மாலிகி தலைமயிலான சீயா அரசு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு அமெரிக்காவைக் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் அது இன்னும் தனது நடவடிக்கைகளை அவர்கள் ஆரம்பிக்காமல் இருக்கின்றனர். அப்படியும் ஏதும் நடவடிக்கைகள் என்ற பேரில் இவர்கள் ஏதேனும் சிறு அளவில் தாக்குதல்களைத்தான் நடத்த முடியும். இவை அனைத்தும் திட்டமிட்ட சர்வதேச இஸ்லாமிய விரோத செயல்பாடுகள். பிராந்தியத்தில் கொந்தளிப்பான நிலையொன்றை உருவாக்கி முஸ்லிம் நாடுகள் தமக்குள்லேயே சண்டையிட்டுக் கொள்வதற்கான பின்னணியை உருவாக்கி அதன் மூலம் இஸ்ரவேலுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதே இந்த நிகழ்ச்சி நிரல் என்பது தெளிவான விடயம்.
பிரித்தானிய எந்தக் காரணம் கொண்டும் இந்த விகாரங்களில் நாம் தலையிட மாட்டோம் என்ற ஏற்கெனவே அறிவித்த விட்து என்பது குறிப்பிடத் தக்கது.
ஈரான் பெரும் தொகையில் ஈராக்கில் முதலீடு செய்திருப்பதுடன் கர்பலா சீயா முஸ்லிம்களின் புனித நகரம் என்பதனால் அதனைப் பாதுகாப்பதற்கு தனது படைகளை ஈராக்கில் அழைப்பின் பேரில் அங்கு அனுப்பி வைத்திருக்கின்றது. மேலும் தனது எல்லையில் பெரும் எண்ணிக்கையான படைகளை ஈரான் குவித்திருக்கின்றது.
இதற்கிடையில் ஈராக்கில் பெரும்பான்மையாகவுள்ள சீயாக்களின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர் ஒருவர் பெருத்தது போதும் ஆயுதங்களைக் கையில் எடுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார் எனவே ஈராக்கில் முஸ்லிம்கள் மத்தியில் உள்நாட்டுப் போர் நிச்சயம். இது இஸ்ரேலுக்கு மிகவும் மகிழ்சியான செய்தி. இந்தப் போரில் இலச்சக் கணக்கான முஸ்லிம்கள் அழிவார்கள் என்பது மட்டும் உறுதி.
கிளர்ச்சியார்கள் கைப்பற்றுகின் இடங்களில் இருந்து இலட்சக் கணககான சீயா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள். எனவே பற்றி எறிகின்ற ஈராக்கில் சதாம் ஹூசைன் ஆவி நடமாடுகின்றது.
truly said Mohamed azeem, one of my Syrian friend also said the same, iran and Israel are friends and the acting to the world like they are enemy.
ReplyDeleteஇந்த கட்டுரையை எழுதியவர் ஓர் நாகரீகம் அற்ற, குறுகிய மனம் படைத்தவராக இருப்பார் என்று நினைக்கின்றேன். சதாம் ஹூசைனின் இழப்பு இன்றும் பல்லாயிரம் மக்களின் மனங்களின் வடுவாக இருக்கின்ற போது அவர் பற்றி கட்டுரைகள் எழுத்தும் போது, முஸ்லிம் என்று நாமம் பூண்ட எழுத்த்தாளர்கள் எவரும், கோழை, மனிதன், அவன், இவன் என்றெல்லாம் வர்ணிக்கவில்லை. (கயமை உள்ளம் கொண்டோரின் இவ்வாறான கட்டுரைகளை வாசிக்கும் போது அருவருப்பாக இருக்கின்றது)
ReplyDelete