Header Ads



முஸ்­லிம்கள் விட்­டுக்­கொ­டுத்­து­விட்டு சென்றால்..!

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் ஒரு தேசிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கின்ற நிலையில் இவ்­வி­ட­யத்தில் அதி­கா­ர­மற்­ற­வர்கள் தலை­யி­டு­வ­தா­னது வேறு­பல பிரச்­சி­னைகளுக்கு வழி­வ­குக்கும் என மேல்­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் அர­சாங்க அதி­கா­ரிகள் பள்­ளி­வாசல் நிரு­வா­க­ச­பை­யி­னரை தவிர்ந்த ஏனை­யோர்கள் தம்­புள்ளை பள்­ளி­வாசல் தொடர்பில் மூக்கை நுழைப்­ப­தா­னது நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இது தேசிய பிரச்­சினை மட்­டு­மல்ல. சர்­வ­தேச ரீதி­யிலும் இன்று தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யதாக இருப்­ப­தாவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் குறித்த இடத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தற்­கான முனைப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக இன­வா­திகள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர். இச்­சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வரு­டங்கள் கடந்­துள்­ளன. இந்­நி­லையில், இதற்­கான தீர்­வொன்றை மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. இத­னை­யொட்டி அர­சாங்­கத்தில் உள்ள 16 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வெட்­கப்­பட வேண்டும்.

இந்த அர­சாங்­கத்தில் உள்ள முக்­கிய பங்­கா­ளி­க­ளான முஸ்லிம் கட்­சிகள் தான் இவ்­வி­வ­கா­ரத்­திற்கு முழுப்­பொ­றுப்பு கூற வேண்­டி­ய­வர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்து பள்­ளி­வா­சலின் இருப்பை பாது­காக்க வேண்டும். சிரேஸ்ட அமைச்சர் பௌஸி மற்றும் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், அதா­வுல்லாஹ் ஆகியோர் தம்­புள்ளை பள்­ளி­வாசல் தொடர்பில் சரி­யா­ன­தொரு முடி­வினை எடுக்க வேண்டும். 

இன்று தம்­புள்ளை புனித பிர­தேசம் என கூறி இனா­ம­லுவ தேரர் அப்­பள்­ளியை அகற்­று­மாறு கோரிக்கை விடுக்­கின்றார். அவரின் கோரிக்­கைக்­கி­ணங்க பள்­ளி­வா­சலை அகற்­றினால் நட்டில் இன்னும் பல பள்­ளி­வா­சல்­களை அகற்­று­வ­தற்கு நாமே அங்­கீ­காரம் கொடுத்­தது போலா­கி­விடும்.

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்ற இடம்­தர முடி­யாது என உறு­தி­யான நிலைப்­பாட்டில் பள்­ளி­வாசல் நிரு­வாக சபை­யினர் இருக்­கின்­றனர். அவர்­களின் முடிவை நாட்­டி­லுள்ள முஸ்­லிம்கள் ஆத­ரிக்க வேண்டும்.

இன­வா­தி­களின் அபி­லா­சை­களை அர­சாங்கம் நிறை­வேற்றும் நோக்கில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்­று­வ­தானால் அவர்­களே செய்­து­கொள்­ளட்டும். ஆனால் முஸ்லிம் தரப்பு இவ்­வி­வ­கா­ரத்தில் மிகவும் கவ­ன­மா­கவே இருக்க வேண்டும். ஏனெனில் நாட்டில் பர­வ­லாக முஸ்­லிம்கள் வசிக்­கின்­றனர். எதிர்­கால சந்­த­தி­யி­னரும் கௌர­வ­மாக வாழ­வேண்­டி­யுள்­ளது.

இன்று நாம் விட்­டுக்­கொ­டுத்­து­விட்டு சென்றால் நாளை எமது சந்­த­தி­யி­ன­ருக்கு இந்­நாட்டில் முஸ்­லிம்கள் என்ற கார­ணத்தால் உரி­மைகள் மறுக்­கப்­படும். முஸ்­லிம்கள் இந்­நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக பாடு­பட்­ட­வர்கள், போரா­டி­ய­வர்கள். இந்­நாட்டில் வளர்ச்­சியில் பெரும் பங்­காற்­றி­ய­வர்கள். தேசி­ய­ரீ­தி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் முக்­கிய பங்­கா­ளி­க­ளாவர். இந்­நி­லையில் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கும் சகல உரிமைகளும் உண்டு.

இந்த அர­சாங்­கத்­தினால் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை உட்­பட ஏனைய பள்­ளி­வா­சல்கள், நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல செயற்­பா­டு­களை தடுக்க முடி­யா­துள்­ளது. விரைவில் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் ஏற்­படும். ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் விரைவில் ஏற்­ப­டுத்­தப்­படும். இதன்­போது நாம் முன்னின்று சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களின் அபிலாசைக்கு ஏற்றவாறு பிரச்சினைகளை தீர்த்துவைப்போம்.

தற்போது அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் இணைந்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வர வேண்டும். அரசியல் அந்தஸ்தற்ற தனிப்பட்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. எதிர்கால இருப்பை கருத்திற்கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.