Header Ads



கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாற்றில் சிங்களவர் முதற்தடவையாக பிரதேச செயலாளராக நியமனம்

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மொகான் விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாற்றில் சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல் கடந்த மார்ச் - பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாள ர்ஜ.எம்.ஹனீபா, இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மகாஓயா பிரதேச செயலாளராக கடமையாற்றிய மொகான் விக்ரமாராச்சி கல்முனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஒருசில தினங்களில் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்படுகிறது.

99 வீதம் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பிரதேச செயலகம் ஒன்றுக்கு சிங்களவர் ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இது குறித்து கல்முனை சிவில் சமூக அமைப்புகள் தமது அதிருப்தியையும் ஆட்சேபனையையும் வெளியிட்டுள்ளன.

5 comments:

  1. நம்மவர்கள் வெளி மாகாணங்களில், மாவட்டங்களில் வேலை செயும் போது இதை அனுமதிக்கலாம்..! ஆனால் நியமிக்கப்பட்ட DS தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும்..! இவர் கடமையை மட்டும் செய்தால் போதுமானது ஆனால் வேலையை காட்ட வருவது ஆபத்தானது சொந்த இலாபங்களுக்காக/ பழிவாங்குதலுக்காக எத்தைனையோ அசிரியர் இடமாற்றம் அதிகாரிகள் இடமாற்றத்தை ஒரு மாகாணசபை உறுப்பினர் செய்ய முடியும் என்றல் ஏன் இந்த நியமனத்தில் ஒரு தமிழ் பேசும் குடிமகனை நியமிக்க முடியாமல் போனது நம் கிழக்கிலங்கை அரசியல் வாதிகள் அனைவருக்கும் இது ஒரு தலைக்குனிவு என்று மன வேதனையுடன் தெரிவிக்கிறேன்..!

    ReplyDelete
  2. பிச்சை வேணாம் நாயப்பிடிங்க என்று இனி சொல்லுவாங்களோ?

    ReplyDelete
  3. கல்முனையில் உள்ள அனைத்து ADMINISTRATION ஊழியர்களும் சிங்கள மயமாக்கினால் நம்ம கல்முனை மாநகரம் நன்றாக செழித்து மிழிரும் என்பது தெழிவான எமது கருத்து. ஏனெனில், அவர்கள் இவர்களை விட தொழிலில் கண்ணியமுடயவர்கள். நம்மவர்களோ, ஏமாற்று திருடர்கள்.

    ReplyDelete
  4. என்கே நமது முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் தனி நிர்வாக அலகு கேட்டவர்கள் கேட்டவர்கள் எங்கே, கல்முனை கரையோர மாவட்டம் பெற்றுத்தருவதாக சொன்னவர்கள் எங்கே போனார்கள், தற்போது சின்ஹல நிர்வாகி நியமிக்கப்பட்டுளர். எங்கே நமது முஸ்லிம் பச்சோந்திகள். எங்கே உங்களது குரல். முஸ்லிம்களின் கோட்டைக்குள் ஒரு சிங்களம். கேளுங்கள் நமந்து பொண்ணாய் அரசியல் வாதிகளிடம்
    தமிழர்கள் தனி தமில்பிரதேச செயலகம் கேட்கும் போது எதிர்த்தவர்கள் இப்போது சிங்களவர் நியமத்தை எதிர்க்காமல் விட்டது ஏனோ. அவர்களுடைய சுக போகங்கள் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தாலா. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை மறந்துவிட்டார்கலா

    ReplyDelete
  5. where the honorable ministers member of parliament and puthijeeweehal now all are sleeping this is very nice planing to president family some time will tell president i dont know this is acting will see what heppan very soon

    ReplyDelete

Powered by Blogger.