Header Ads



அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முடியாத தரப்பினர், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி - ஞானசார தேரர்

அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு எதிராக விவரணச் சித்திரங்களை தயாரித்து வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்களின் ஊடாக செயற்பட்டு வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விவரணச் சித்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முடியாத தரப்பினர் வேறும் வழிகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். குறிப்பாக பொலிஸாரை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் விவரணச் சித்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கு ஒரு சிங்கள அமைப்புக்களும் ஆதரவளித்து வருகின்றன. ஒரு விவரணச் சித்திரத்தை தயாரிப்பதற்கு 76000 அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது. இணையத்தின் ஊடாக இந்த விவரணச் சித்திரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. விடிந்து தேயில தண்ணி குடிக்காட்டியும், இவர பாக்காம இருக்க முடியுதில்ல உடகங்களில், இவர் கதைப்பதெல்லாம் இவர்ட காட்சிப்பிளையா இல்ல கற்பனையா என்று தெரியாம இருக்கு..!

    ReplyDelete

Powered by Blogger.